பால கைலாசம் நினைவு விருது 2015

kb-bkமுதல் ”பால கைலாசம் நினைவு விருது” 2015

(சமூக முன்னேற்றத்திற்காக புதுமையான முறையில்

ஊடகத்தை பயன்படுத்தியவருக்கான விருது)

பால கைலாசம் நினைவு விருது (BKMA)திரு பால கைலாசம் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கனவு ஆகியவற்றை கொண்டாடும் வகையில் (Cinema Rendezvous Trust) சினிமா ராண்டேவு அறக்கட்டளையால் நிறுவப்பட்டுள்ளது.

இந்த விருது தகுதியுரையுடன் கூடிய சான்றிதழ் மற்றும் பணமுடிப்பு கொண்டது.

BK என்றுஅன்புடன்அழைக்கப்பட்ட திருபாலகைலாசம், பெருமதிப்பிற்குரிய தொலைக்காட்சித்துறைஅறிஞர் மற்றும்ஆவணப்படசெயல்பாட்டாளர். அவர் ஒரு தீர்க்கதரிசி. வெகுஜனஊடகத்துறையின்வளர்ச்சி,சமுதாயத்தில்அவற்றின்தாக்கம்எவ்வாறுஇருக்கும்என்பதைமுன்கூட்டியேகணித்துசெயல்பட்டவர்.சமூகநலன், சுற்றுப்புறசூழலின்மேம்பாடு,மற்றும்மானுடசமூகத்தின்உயர்வுஆகியவற்றிற்காகஊடகத்தைப்நல்லமுறையில்பயன்படுத்தவேண்டும்என்கிறஅவரதுகனவு (அவரது தந்தை திரு பாலச்சந்தர் அவர்களின் மறைவுக்கு முன்பே) 2014-ல்நிகழந்த அவரதுஅகாலமரணத்தால்நிறைவேறாதுஉள்ளது.

சினிமாராண்டேவு (Cinema Rendezvous) எனப்படும் CR ஒருபதிவுசெய்யப்பட்டஅறக்கட்டளை. கலை, கலாச்சாரம், சார்ந்ததளங்களில்கலைஞர்களுக்கிடையேசமூகஉரையாடலைமுன்னெடுத்துச்செல்லும்நிகழ்வுகளைநிகழ்த்திக்கொண்டிருக்கிறது. திரு பால கைலாசம் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கனவு ஆகியவற்றை கொண்டாடும் வகையில் சமூகமுன்னேற்றத்திற்காகபுதுமையானமுறையில்ஊடகத்தைபயன்படுத்தியவருக்காக பால கைலாசம் நினைவு விருது The Bala Kailasam Memorial Award (BKMA) சினிமா ராண்டேவு அறக்கட்டளையால் (Cinema Rendezvous Trust) நிறுவப்பட்டுள்ளது.

இந்த விருது தகுதியுரையுடன் கூடிய சான்றிதழ் மற்றும் ரூபாய் 50,000 பணமுடிப்பு கொண்டது.

பால கைலாசம் நினைவு விருது (BKMA) சமூக மாற்றத்தை உருவாக்கும் வகையில் பின் வரும் ஏதேனும் ஒரு ஊடகத்துறையைப் பயன்படுத்தி ஒரு தனி நபர் அல்லது ஒரு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டிற்கு/நற்பணிக்கு வழங்கப்படுகிறது.

  1. சமூக ஊடகம்
  2. தொலைக்காட்சிcr
  3. அச்சு ஊடகம்
  4. வானொலி
  5. ஆவணப்படம்

விருதுபெறுபவரின்பங்களிப்பானதுஒருசமூகத்திலோ / மாநிலத்திலோ / இந்தியாவிலோசமூகமேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடத் தகுந்ததாக்கத்தைஏற்படுத்தியநற்பணியாகஇருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் நாடுமுழுவதிலும் இருந்து பெறப்பட்டன, பத்திரிக்கைச் செய்தி, சமூக வலைத்தளங்கள், மற்றும் பரிந்துரைகள் மூலமாக பெறப்பட்டன. நம் நாடுமுழுவதும் பல்வேறு ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றும் பிரபல ஆளுமைகள் கொண்ட “பரிந்துரைக் குழு” (Nomination panel) ஒன்று அமைக்கப்பட்டு மேலே குறிப்பிடப்பட்ட ஊடகத் துறையின் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவரை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இறுதிசெய்யப்பட்ட பரிந்துரைகள் சிறப்பு நடுவர் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுட்டன. அவரவர் துறை சார்ந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நடுவர் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கலந்தாலோசித்து பால கைலாசம் விருது பெறும் வெற்றியாளரைத் தீர்மானித்தனர்.

5perசிறப்பு நடுவர் குழு உறுப்பினர்கள்

  1. ஏ.எஸ். பன்னீர்செல்வம், வாசகர்களுக்கான ஆசிரியர், தி ஹிந்து
  2. எல்.நாகராஜன் திரைப்பட இயக்குநர்/ஊடக ஆலோசகர்
  3. ஆர்.வி.ரமணி ஆவணப்பட செயற்பாட்டாளர்
  4. சஷி நாயர், இயக்குநர், பிரஸ் இந்தியா நிறுவனம்
  5. பிந்து பாஸ்கர், முன்னாள் முதல்வர், ஏசியன் இதழியல் கல்லூரி

பால கைலாசம் நினைவு விருது 2015 முதல் விருதைப் பெறுபவர்: திரு ஹோபம் பபன் குமார், “ஃபம் ஷாங்” (தத்தளிக்கும் வாழ்க்கை) என்ற ஆவணப்படத்திற்காக பெறுகிறார்.

ஃபம் ஷாங் (தத்தளிக்கும் வாழ்க்கை) என்ற இந்த 52 நிமிட ஆவணப்படம், ஃபிலிம் டிவிஷனால் தயாரிக்கப்பட்டது. இது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லோக்தக் ஏரியை வாழ்வாதாரமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவ சமூதாய மக்களின் தத்தளிக்கும் வாழ்க்கையைச் ஈர மனதுடன் துப்பறிந்து சொல்கிறது.

இந்த ஏரியைச் சுற்றி வாழும் மக்கள் அதனை மாசுபடுத்துவதாகவும் ஏரியை தூர்வாரப்போவதாகவும் சொல்லிக்கொண்டு மணிப்பூர் அரசு 2011 ஆம் ஆண்டு, இவர்களின் நூற்றுக்கணக்கான குடிசைகளை எரித்துவிட்டது. ஆயிரக் கணக்கான மீனவர்கள் வீடில்லாதவர்களாகவும் வாழ்வாதாரம் இல்லாதவர்களாகவும் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். வேறு போக்கிடம் இல்லாத அந்த மீனவர்கள் இன்றும் அரசு இயந்திரங்களுக்கு எதிராக போராடிவருகின்றனர்.

அவர்கள் நிலையான இருப்பிடங்களை அமைத்துக்கொள்ளாமல், மிதவைகளிலேயே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்ததால் நீங்கள் இந்த பகுதியின் பூர்வ குடிமக்கள் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று காரணம் சொல்லி அரசு அதிகாரிகள் அவர்களின் போராட்டங்களை தோற்கடித்தாலும் இன்னும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த ஏழை மக்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக்கும் முயற்சியில் இந்த படம் மீனவர்களின் வாழ்வாதாரம் சுரண்டப்படுவது, அவர்களின் தொடர் போராட்டங்கள், வாழ்க்கை மீதான நம்பிக்கை ஆகியவற்றை சொல்வதில் ஒரு உருவகமாக உயர்ந்து நிற்கிறது.

இந்த படம் பார்வையாளனை கலங்க வைத்து வெவ்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நாம் வழக்கமாக சிந்திக்கும் பாதையை மாற்றி புதிய சிந்தனைகளை அணிவகுக்க வைக்கிறது.

இந்த ஆவணப்படம் இதுவரை, 2014 ஆம் ஆண்டுக்கான 62வது தேசிய விருதுகளில் சிறந்த துப்பறியும் படத்திற்கான வெள்ளித்தாமரை விருது; கேரளாவில் நடைபெற்ற எட்டாவது உலக குறும்பட மற்றும் ஆவணப்பட விழாவில் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த நெடும்-ஆவணப்படத்திற்கான விருது, ஆகிய முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது.

ஹோபம் பபன் குமார் கொல்கத்தாவில் உள்ள சத்யஜித்ரே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றவர். இவரது படங்கள் இதுவரை பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் FIPRESCI பரிசு உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன் 2011 ஆம் ஆண்டு சர்வதேச கான் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் ஆறு வளரும் இளம் திறமைசாலிகளில் ஒருவராக கலந்துகொண்டார். ஹோபம் மணிப்பூரில் வாழ்வதுடன் அம்மாநில மக்களைப் பற்றிய படங்களையே எடுக்கிறார்.

தேசிய விருது பெற்ற நடிகை மற்றும் சென்னை Grand Duchy of Luxembourg இன் கெளரவ தூதுவரான சுஹாசினி மணிரத்னம், விருது பெறுபவரை கெளவரிக்கும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.

பியானோ இசைக்கலைஞர் அனில் ஸ்ரீனிவாசன் அவர்களின் “மின்பிம்பங்கள் மெலொடீஸ்” என்ற இசைத்தொகுப்புடன் இந்த விருது வழங்கும் விழா தொடங்கும். (மின்பிம்பங்கள் தயாரித்த பிரபல தொலைக்காட்சித் தொடர்களின் முகப்புப் பாடல்களின் இசைக்கதம்பம்)

நடுவர் குழு உறுப்பினர்கள், மற்றும் சினிமா ராண்டேவு நிறுவனத்தின் நலன் விரும்பும் பல்துறை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து விருது பெறும் ஆவணப்படம் திரையிடப்படுகிறது. திரையிடலின் நிறைவில் விருது பெறும் கலைஞருடனான உற்சாகமான கலந்துரையாடல் சினிமா ராணேவு பாணியில் நடைபெறும்.

விருது வழங்கும் விழா மற்றும் திரையிடல்

நாள்: 26 அக்டோபர் 2015 (திங்கள்)

நேரம்: மாலை 5:30 மணி

இடம் : ஹோட்டல் சவேரா

சிறப்பு அழைப்பாளர்: திருமதி சுஹாசினி மணிரத்னம்

 அழைப்பிதழ் பெற cinemarendezvous@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

தொடர்புக்கு (மேலதிக தகவல் மற்றும் விருது பெறுபவருடன் நேர்காணலுக்கான நேரஒதுக்கீடு பெற)

9500109024 / 9841125522 / 9677277854 /

சினிமா ராண்டேவு குழுவினர்

Team CINEMA RENDEZVOUS

cinemarendezvous@gmail.com

www.cinemarendezvous.com

https://www.facebook.com/CinemaRendezvous

சினிமா ராண்டேவு ஓர் அறிமுகம்cr!

சினிமா ராண்டேவு ஒரு பதிவுசெய்யபட்ட லாபநோக்கமில்லாத அறக்கட்டளை. நடிகை மற்றும் தொழிலதிபர் சைலஜா செட்லூர் இதன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர். திரைப்பட இயக்குநர்கள் நாகா மற்றும் அருண்மணி பழனி ஆகியோர் இதன் அறங்காவலர்கள். சவேரா ஹோட்டல் இணை இயக்குநர் நீனா ரெட்டி ஆதரவுடனும், நல்லுள்ளம் கொண்ட புரவலர்கள் குழுவின் ஆதரவுடனும் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

CR அறக்கட்டளை, கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் படைப்பாற்றல் கலைகள் மூலமாக சமூக உரையாடல்களை நிகழ்த்தி வருகிறது. திரைப்படத் திறனாய்வு மற்றும் அது தொடர்பான பயிற்சி வகுப்புகளை, குறிப்பாக கிராமப்புற பகுதிகளிலும் நடத்துவது ஆகியவை இந் நிறுவனத்தால் சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்படும் செயல்பாடுகளில் சில. மனிதநேயம், கல்வி, மற்றும் விழிப்புணர்வு சார்ந்த சமூக முயற்சிகளை சில திரைப்படத்துறையின் அமைப்புசாரா நிறுவனங்களுக்கிடையே இந்த அறக்கட்டளை நிகழ்த்தி வருகிறது.

தேசிய பார்வையற்றோர் அமைப்புடன் CR இணைந்து செயல்படுகிறது. பார்வையற்றோர் நலனுக்காக நடத்தப்படும் திரைப்படம் மற்றும் கலை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதில், குறிப்பாக கடைசி இரண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றியது.

சினிமா ராண்டேவு சென்னையில் இருந்து செயல்படும் ஒரு திரைப்பட மன்றமாக அக்டோபர் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டடு ஒவ்வொரு மாதமும் சவேரா ஹோட்டலில் சந்திப்புகளை நடத்துகிறது. ஒவ்வொரு “சந்திப்பும்” ஒரு திரைப்படம் திரையிடல், சிறப்பு விருந்தினருடன் உற்சாகமான கலந்துரையாடல் என தொடர்ந்து நடைபெறுகிறது.

திரைப்படம் பார்க்கும் பேரார்வத்தைக் கொண்டாடும் வகையில் இதனை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதாமல் கருத்தாழம் மிக்க ஓர் அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றும் நோக்கத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த திரைப்பட மன்றம் வெவ்வேறு விதமான உறுப்பினர்களும், சுவாரஸ்யமான பங்கேற்பாளர்களும் திரைப்படங்களைப் பார்த்து கலந்துரையாடுவதை சாத்தியப்படுத்துகிறது. தமிழ், மற்ற மாநில மொழிகள், மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்த்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், தங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்களைப் பற்றி விவாதிக்கவும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இதுவரை நடைபெற்ற மாதாந்திர சந்திப்புகளில் பிரபல ஆளுமைகளான இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், சமுத்திரகனி, ஜெயேந்திரா, சசி, பிஜோய் நம்பியார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, தயாரிப்பாளர்கள் சி.வி. குமார், ஜே. சதீஷ்குமார், நடிகர் & இயக்குநர் சுஹாசினி மணிரத்னம், எழுத்தாளர்கள் சுபா, படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோருடன் கலை மற்றும் ஊடகம் சார்ந்த பிரபலங்கள் பலர் தங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளனர். திரைப்படம் என்னும் கலையை வெவேறு வல்லுனர்களின் வித்தியாசமான பார்வையில் கலந்துரையாடுவதே ஒவ்வொரு திரையிடலின் சிறப்பாக அமைகிறது. தொடங்கப்பட்டது முதல் CR, திரைப்படங்களை நேசிக்கும் தனது கனிசமான எண்ணிக்கையிலான சினிமா ஆரவலர்களின் வருகையுடன் இந்த சந்திப்புகளை தங்கு தடையில்லாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

The Hindu Lit for Life’s Outreachநிகழ்ச்சியில் The Hindu உடன் CR இணைந்து இரண்டு இலக்கிய ஆளுமைகளான யூ.ஆர். அனந்தமூர்த்தி மற்றும் வாசுதேவநாயர் ஆகியோரின் ஆவணப்படங்களைத் திரையிட்டது.

Acting Nuanced  எனும் தலைப்பில் இயக்குனர் நாகா நெறிப்படுத்திய நடிப்புப்பயிற்சியை மேடைநாடகங்கள், தொலைக்காட்சி, திரைப்படம் ஆகிய வெவ்வேறு ஊடகங்ளுக்கான நடிப்பு அணுகுமுறைகள், நடிப்புக்கான நுணுக்கங்கள், ஆகியவற்றை தொழில்முறை நடிகர்களான சில சுவாரஸ்யமான பங்கேற்பாளர்களுடன் நடத்தியது.

Cinema Minima: வளரும் திரைப்பட படைப்பாளிகளுக்கான சிறப்பு குறும்படங்கள் திரையிடலை 2015-இல் முதல் முயற்சியாக நடத்தியது.

A Film Reviewing panel discussion- POV Matters, எனும் தலைப்பில் அண்ணா பல்கலைக் கழகத்தில் சைலஜா செட்லூர் நடுநிலை வகிக்க, திரைப்பட இயக்குநர்கள் ராம், நாகா, மதுமிதா, ப்ரியா ஆகிய வல்லுனர்கள் பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர். இந்த பயிற்சி முகாமில் திரைப்பட விமர்சனத்தில் இருக்க வேண்டிய நியாய தர்மங்கள், ஆரோக்கியமான விமர்சனம், சமூக வலைத்தளங்களின் பொறுப்புணர்ச்சி ஆகிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.

சினிமா ராண்டேவு கலையம்சத்துடன் உருவாக்கப்பட்ட தகுதியுரை சான்றிதழ் மற்றும் பணமுடிப்பு ஆகியவற்றுடன் 2015-ஆம் ஆண்டு முதல் பால கைலாசம் நினைவு விருதை நிறுவியதில் பெருமை கொள்கிறது.