சென்னையில் நேற்று மதநல்லிணக்கத்தின் அடையாளமாக ஓர் இப்தார் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது .லட்சுமிவிலாஸ் வங்கியின் சார்பில் ஏற்பாடு செய்ய்யப்பட்டு இந்த நிகழ்வு சென்னை பிரசிடெண்ட ஓட்டலில் நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனிதமாதமான ரமலான் மாதத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து மதத்தைச் சேர்ந்த சரவணன் சாஸ்திரி ,கிறிஸ்துவ பங்குத்தந்தை டி..பீட்டர் தோமா ,தமிழ்நாடு தலைமை ஹாஜி முக்தி முகமது சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .
லட்சுமி விலாஸ் வங்கியின் முதன்மை நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி, உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் கே.என். பாஷா, மலேசிய நாட்டு தென் இந்திய தூதர் ஹை கமிஷனர் ஹாஜிஅகமத் பஜாராஜம், பிரசிடெண்ட் ஓட்டல் அதிபரும் இந்திய ஹஜ் கமிட்டி தலைவருமான அபுபக்கர், பாரத் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் டாக்டர் கே. சதக்கத்துல்லா, மாண்புமிகு நீதியரசர் அக்பர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நோன்பு திறப்பு முறைப்படி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், “இந்த புனிதமான ரமலான் மாதத்தில் மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாக லட்சுமி விலாஸ் வங்கி இந்த இப்தார் நிகழ்வுக்கு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது. லட்சுமி விலாஸ் வங்கி முழுக்க முழுக்க தமிழர்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கியாகும்.இந்நிகழ்வை முன்னெடுத்து நடத்தும் வங்கியின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை. இநதப் புனித காரியத்தை ஏற்பாடு செய்ததற்கு அனைத்து இஸ்லாமியர் சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இது நம் நாட்டு சமுதாய ஒருமைப் பாட்டுக்கு உதாரணமாகும்.
ஆரம்பத்திலிருந்தே இந்நிகழ்ச்சியை மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாகவும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் மக்கா மசூதி இமாம் அவர்களை முன்னிலை வகிக்கச் செய்து மூன்று மதத்தினரையும் பங்கு பெறச்செய்து சிறப்பாகச் செய்தார்கள்.
மலேசிய தென்னகத்தின் ஹை கமிஷனர்ஹாஜிஅகமத் பஜாராஜம் வந்திருக்கிறார்கள். நாடு சுதந்திரமடைந்தது முதல் மலேசிய தீபகற்பத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கிய மலேசிய பிரதமர் டத்தோ நஜிப் அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. எட்டுக்கோடி தமிழர்களின் சார்பில் அவருக்கும் அவரது அரசுக்கும் உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் தாயுள்ளம் கொண்டு இந்தியாவின் 2016-க்கான ஹஜ் யாத்திரை பயணிகள் கோட்டாவை சவுதி மன்னரிடமிருந்து 5 சதவிகிதமாவது பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். சவுதி மன்னரிடம் இந்த அனுமதியைப் பெற்றுத்தருமாறு 126 கோடி இஸ்லாமிய மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
லட்சுமி விலாஸ் வங்கி மனிதர்களாலும் மனித நேய மிக்கவர்களாலும் சேவை நோக்கில் இயக்கப்படும் வங்கியாகும். காகிதங்களையும் கம்ப்யூட்டர்களையும் மட்டும் நம்பி இருக்காமல் மனிதாபிமானத்தோடு மனிதர்களால் இயங்கும் வங்கியாகும்.
அல்லாவின் அடியார்களே நீங்கள் இந்த வங்கியின் சேவையை ஏற்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு வளர வேண்டுகிறேன். உலமா பெருமக்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் எல்லா சகோதரர்களுக்கும் என் புனித ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
இவ்வாறு லட்சுமி விலாஸ் வங்கி இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இந்த இப்தார் நிகழ்ச்சி மும்மதத்தினரும் கலந்து கொண்ட முழுமையான மத நல்லிணக்க அடையாளம் எனலாம்.