முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’ என்கிற படம் உருவாகி வருகிறது.

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் .

உன்னையே நீ அறிவாய் உனக்குள் இருக்கும் இறைவன் உணர்வாய் , உன் உயரம் அறிவாய் என உரக்கச் சொல்கிறது படம் “என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .
நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத் , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை சிவநக் , பாடல்கள் கபிலன் மணி அமுதன் , ப்ரியன் ,எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர் .
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.