என்டிஆர் 30 படத்திற்குத் ‘தேவாரா ‘என்று பெயரிடப்பட்டுள்ளது, நடிகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு என்டிஆர்-ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
ஆர்ஆர்ஆரின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, ஜூனியர் என்டிஆர் தற்போது தனது ஜனதா கேரேஜ் இயக்குநரான கொரட்டால சிவாவுடன் என்டிஆர் 30 படத்திற்காக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜான்வி கபூர் மற்றும் சாயிஃப் அலி கான் ஆகியோர் தெலுங்கில் அறிமுகம் ஆகிறார்கள்.
சாயிஃப் அலி எதிர்மறைப் பாத்திரத்தில் வருகிறார்.
இந்த ஆண்டு, என்டிஆர் பிறந்தநாள் அவரது தீவிர ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் சிறப்பாக மாறியது.
போஸ்டரில் லுங்கி அணிந்த என்டிஆர் கையில் பெரிய ஆயுதத்துடன் புதிய அவதாரத்தில் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
இப்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் என்டிஆர் ஒரு மூர்க்கமான அவதாரத்தில் கறுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறார்.அவர் அமர்ந்துள்ள பாறைகளில் , படகில் கிடக்கும் சடலங்களின் குவியலையும் காணலாம்.
போஸ்டரே போதும் என்ற பயத்தை எல்லோருக்கும் உண்டாக்குகிறது. என்டிஆர் 30, படத்துக்கு சக்தி வாய்ந்த “தேவாரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. சுவாரசியமான தலைப்பும், சக்திவாய்ந்த ஃபர்ஸ்ட் லுக்கையும் அடுத்த கட்டத்திற்கு எகிறி உயர்த்துகிறது. என்டிஆரின் இந்தப் பிரம்மாண்டமான தோற்றத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சமூக ஊடகங்களில் கருத்தைப் பதிவு செய்யும் பகுதிகள் பற்றி எரியும் நெருப்பு,அன்பைத் தெரிவிக்கும் இதயம் என்று எமோஜிகளால் நிரம்பி வழிந்தன.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பல்துறை நடிகர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் இப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.இந்தப் படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று பேசப்படுகிறது.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பிற குறிப்பிடத்தக்க நடிகர்கள் நடித்துள்ளனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தை நந்தமூரி கல்யாண் ராம் வழங்குகிறார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் 2024 ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபு சிரில் கையாளுகிறார்.