விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், கவின் பாபு, ராதிகா, சண்முகராஜா, ராதிகா ஆப்தே, ராஜேஷ் வில்லியம்ஸ், பாரி மகேஸ்வரி சர்மா, அஸ்வினி கால்சேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்
ஸ்ரீராம் ராகவன் இயக்கி உள்ளார். பிரதீப் குமார் எஸ், அப்துல் ஜபார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன், கதையில் பங்கேற்றுள்ளனர்.இசை ப்ரீத்தம், பின்னணி இசை டேனியல் ஜார்ஜ், படத்தொகுப்பு பூஜாலதா சுர்தி,
டிப்ஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட், மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளன.ரமேஷ் தெளராணி, சஞ்சய் ரெளத்ரே, ஐயா தெளராணி, கேவல் கர்க் தயாரிப்பாளர்கள்.ஏ.பி. இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
இது ஒரு பிரெஞ்சு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம்.ஒரு கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் கதை.கத்ரீனா கைஃப் கணவன் மீது வருத்தத்தில் இருக்கும் ஒரு பெண்மணி. அவருக்கு ஒரு குழந்தை.அவரை ஒரு கிறிஸ்துமஸ் இரவில் விஜய் சேதுபதி சந்திக்கிறார்.பிறகு பல மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன.இப்படி ஒரு நாள் இரவு,கொலை, மர்மம், புலனாய்வு என்று ஒரு குடும்பக் கதையில் இருந்து மர்மக் கதையாக மாறி யாரும் எதிர்பாராத முடிவை நோக்கிச் செல்கிற படம்தான் மெரி கிறிஸ்துமஸ்.படத்தில் ஆல்பர்ட் பாத்திரத்தில் வருகிறார் விஜய் சேதுபதி .மரியா பாத்திரத்தில் வருகிறார் கத்ரீனா.
வித்தியாசமான பாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற விஜய் சேதுபதி இதிலும் அந்த வரிசையில் நல்லதொரு பாத்திரத்தை ஏற்றுள்ளார் .அவருக்கும் கத்ரீனா கைஃப்புக்கும் இடையில் நடக்கும் ரொமான்ஸ் ,பிளாஷ்பேக்கில் வரும் அவரது முந்தைய ஜோடி ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட காட்சிகள் என்று அனைத்திலும் விஜய் சேதுபதி புகுந்து விளையாடி இருக்கிறார்.
ஒரு குழந்தைக்கு தாயாகவும் அன்புக்கு ஏங்கும் பெண்ணாகவும் வருகிறார் அனுபவசாலி நடிகையான கத்ரீனா கைஃப். அவரும் பொருத்தமான பாவனைகள் மூலம் தனது நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார்.அவரது மகளாக வரும் சிறுமியும் மொழி பேசாமல் விழிகளால் பேசிக் கவர்கிறார்.
கொலையைப் பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ராதிகா வருகிறார்.அவருக்கு காக்கி பாத்திரம் புதிதல்ல என்றாலும் தனது முத்திரையைக் காட்டியுள்ளார். விஜய் சேதுபதியுடன் முன்கதைக்கான சில காட்சிகளில் மட்டும் ராதிகா ஆப்தே வருகிறார்.
கவின் பாபு வித்தியாசமான வேடத்தில் வந்து கலகலப்பூட்டிக் கலக்குகிறார்.
மது நீலகண்டனின் ஒளிப்பதிவில் ஒளி அமைப்புகள் ரசிக்க வைப்பவை.இசைஞானி இளையராஜாவினை நினைவுபடுத்துகிறது டேனியல் ராஜின் பின்னணி இசை.
கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் குதூகலம் பற்றி வண்ணமயமான காட்சிகளைக் வைத்து அந்தப் பண்டிகை மனநிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் இயக்குநர்.
படத்தில் திடுக் வசனங்களும் திடுக்கிட வைக்கும் திருப்பங்களும் உண்டு.படம் இந்தி தமிழ் மொழியில் உருவாகி இருந்தாலும் விசாலமான காட்சிகளும் அதை உருவாக்கமும் ரசிக்க வைக்கின்றன.
மெரி கிறிஸ்மஸ் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு நம்மை அழைத்துச் சென்று திருப்புமுள்ள திரைப்படத்தைப் பார்த்த திருப்தியைத் தரும் படம் எனலாம்.