ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் ‘மர்மர்’

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்போடு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றம் படத்தின் டீசர் மற்றம் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானதோடு, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

மர்மர் திரைப்படம் வெளியான இரண்டாவது நாளில், இந்தப் படம் தற்போது 200-க்கும் அதிக திரைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், 3வது நாளான ஞாயிற்று கிழமை அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. திங்கட்கிழமையான நேற்று நல்ல வசூல் செய்து இருக்கிறது. மேலும் வரும் நாட்களில் இந்தப் படம் அதிக திரைகளில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜேசன் வில்லியம்ஸ் மேற்கொள்ள ஒலி வடிவமைப்பு பணிகளை கெவின் ஃபிரடெரிக் மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரோஹித் மேற்கொண்டுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.