
கவிஞர் எழுத்தாளர் இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘தாய்நிலம்’ கவிதை நூலின் அறிமுக விழா தமிழ் ஸ்டுடியோ வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இந் நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் , எழுத்தாளர் ஏக்நாத், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன், தாய் பிரபு, முனைவர் மஞ்சுளா, ‘கல்கி’அமிர்தம் சூர்யா,கவிஞர்அருண்பாரதி, ‘கமல் நற்பணி இயக்கம் ‘ குணசீலன், தமிழ் ஸ்டுடியோ அருண் மோ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இது சம்பிரதாய இலக்கிய நிகழ்வாக அமையாமல் நண்பர்கள் புடைசூழ்ந்த இலக்கிய சந்திப்பாக மாறியது மகிழ்ச்சிக்குரியதாகும். நண்பர்களால் ஆனது தன் உலகம் என்பதை ராசி அழகப்பன் இவ்விழாவின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
