கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் ,நிக்கிகல்ராணி , ராதாரவி ,தம்பி ராமையா ,விஜயகுமார் , சதிஷ் , மனோபாலா, சிங்கம்புலி , யோகிபாபு , ஆடம்ஸ் , சரவணசக்தி, ,ரமணி , ராஜ்கபூர் ,தாஸ் , நமோநாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா , நிரோஷா ,சந்தானலட்சுமி ,சசிகலா ,யமுனா ,மணிசந்தனா ,மணிமேகலை,மீரா ,லாவண்யா ,ரஞ்சனா,ரஞ்சிதா ,ரம்யா ,தீபா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் .
கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை கூறும் நோக்கில் உருவாகி இருக்கும் படம். அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றதா இல்லையா என்பதைப் பார்ப்போம்.
கிராமத்தில் விவசாயம் செய்து ஊரே மெச்சும்படியாக கெளரவமாக வாழ்ந்து வருகிறது விஜயகுமாரின் குடும்பம். சுமார் 40 பேர் உள்ள அந்த கூட்டுக் குடும்பத்தின் பெரிய தூண்களாக இருக்கிறார்கள் விஜயகுமாரும் அவரது மனைவியுமான ரமணியும்.அந்தப் பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளைதான் நாயகன் சசிகுமார் . அவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரு மிகப்பெரும் ப்ராஜெக்ட் ஒன்று சசிகுமாரின் திறமையால் அவரது நிறுவனத்திற்கு கிடைக்கிறது.
இந்த ப்ராஜெக்டை தோற்கடிப்பதற்காக மூன்று நிறுவனங்களின் நிறுவனர்களும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். ஒரே மாதத்தில் ப்ராஜெக்டை முடிக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் சசிகுமார்.
அதேசமயம், வீட்டில் திருமணத்திலிருந்து தப்பிப்பதற்காக நிக்கி கல்ராணியைத் தான் காதலிப்பதாகப் பொய் கூறி அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் சசிகுமார். வீட்டில் உள்ளவர்களும் காதலுக்கு சம்மதித்து விட, படிப்படியாக திருமணம் வரை சென்று விடுகிறது.
சசிகுமார் வீட்டில் நடிக்க வந்த நிக்கி கல்ராணி, அதே வீட்டிற்கு மருமகளாக ஆகிறார். யார் இந்த நிக்கி கல்ராணி.? சசிகுமாரை ஏன் திருமணம் செய்து கொண்டார்.? குறிப்பிட்ட காலத்திற்குள் ப்ராஜக்ட் முடிக்கப்பட்டதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
சசிகுமார்,கிராமத்து வாலிபனாக வழக்கம்போல் தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
நிக்கி கல்ராணி பல இடங்களில்மிகை நடிப்பு.
படத்தில் 30க்கும் மேற்பட்ட நடிகர்கள் இருந்தும் யாருக்கும் பெரிதான டயாலாக்குகள் கொடுக்கப்படாமல் கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைத்திருக்கிறார்கள்.ஏராளமான பாத்திரங்கள் நடிப்பை வெளிப்படுத்தவாய்ப்பு இல்லாமல் வெறும் பின்புலக் காட்சியாகத் தெரிகின்றன.
நல்ல குடும்பப் படமாக வந்திருக்க வேண்டிய படத்தை மலிவான காட்சிகளால் சிதைத்துச் சிறுமைப்படுத்தி விட்டார்கள்.
குறிப்பாக யோகிபாபு தம்பி ராமையா வரும் காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவை மலிவான மலிவானவை.
ஓவர் ஆக்ஷனால் எரிச்சல் மூட்டு கிறார்கள்.
நம்பகத்தன்மையற்ற காட்சிகளால் கதை பலவீனப்பட்டு நிற்கிறது.
இயக்குநராக இருந்து கொண்டு சசிகுமார் எப்படிக் கோட்டை விட்டார்?
பின்னணி இசைக்கு வேண்டுமானால் சாம் சிஎஸ் ஓகே.
ஆனால் மண் மணம் கமழும் இந்த நேட்டிவிட்டி படத்தின் இசைக்கு அவர் பொருந்தவில்லை.பாடல்களில் அவர் பலவீனப்பட்டுத் தெரிகிறார்.
படத்தில் சற்று ஆறுதல் என்றால் அது சித்தார்த்தின் ஒளிப்பதிவு தான். அவரது ஒளிப்பதிவு கலர்ஃபுல்.
ராஜவம்சத்தில் கம்பீரம் இல்லை.