லத்தீன் அமெரிக்காவில்  நடந்த உண்மைச் சம்பவம் ‘அபியும் அனுவும்’

ஒரு சாதனையாளருக்கு பிள்ளையாக பிறந்து வளர்வது ஒரு சுகமான சுமையாக இருக்கும். அவர்களுக்கு  எந்த துறையிலும் நுழைவு எளிதாக இருக்கலாம் ஆனால் வெற்றிக்கான செயல்முறை ஒன்றாகத்தான் இருக்கும்.  
 
இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் மிக பெரிதாக ஆகி  அதுவே ஒரு சுமையாக மாறும். விரைவில் ரிலீசாக இருக்கும் ‘அபியும் அனுவும்’ படத்தை மறைந்த தமிழ் சினிமாவின் ஜாம்பவான் B R பந்துலுவின் மகள் B R விஜயலக்ஷ்மி இயக்கியுள்ளார். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான  B R விஜயலக்ஷ்மி 22 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.’டாடி’ என்ற மலையாள படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையும் அவரை சார்ந்தது. அவர் தற்பொழுது ‘அபியும் அனுவும்’ என்ற துணிச்சலான காதல் படத்தை இயக்கியுள்ளார்.
 
” லத்தீன் அமெரிக்காவில்  நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்தே ‘அபியும் அனுவும்’ கதையை எழுதினேன். இது ஒரு துணிச்சலான, அழகாக சொல்லப்பட்டுள்ள கதை. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பிண்ணப்பட்டுள்ள சுவாரஸ்யமான கதைகளை தயாரிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருப்பது எங்களது தயாரிப்பு நிறுவனம் ‘Yoodlee films’. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள டோவினோ தோமஸும் பியா பாஜ்பாயும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரமாகவே மாறி மிக சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
இக்கதையின் துணை நடிகர்களான சுஹாசினி, பிரபு, ரோகினி மற்றும் மனோபாலா ஆகியோர் தங்களது தேர்ந்த நடிப்பினை தந்துள்ளனர். படத்தில் விளம்பரத்திற்கு இந்த நட்சத்திர பட்டாளம் மிகவும் உதவியாக உள்ளது. தரனின் இசையும் பாடல்களும் இப்படத்திற்கு மேலும் உயிரூட்டியுள்ளது. இப்பட பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். மதன் கார்க்கியின் பாடல் வரிகள் அழகு. அகிலனின் ஒளிப்பதிவு இப்படத்தை மேலும் அழகாக்கி கலைநயமாகியுள்ளது. உதயபானு மகேஸ்வரனின் கதையும் திரைக்கதையும் இப்படம் ரிலீசுக்கு பிறகு பெரியளவில் பேசப்படும். படத்தொகுப்பு செய்ய  எளிதில்லாத இக்கதையை மிக லாவகமாக கையாண்டு  வழங்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுனில் ஸ்ரீ நாயர். ‘அபியும் அனுவும்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என  நம்பிக்கையோடு கூறினார் B R விஜயலக்ஷ்மி.