‘லவ்வர்’ படக் குழுவினருடன் ஒரு காதலர் தின சந்திப்பு !

காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லி ஒரு புதிய உரையாடலைத் தொடங்கி வைத்துள்ள படம் லவ்வர். இப் படத்தின் புதிய கதை கூறும் முறையும் காட்சிகளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று படத்தை  வெற்றிப்பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

காதலர் தினமான இன்று லவ்வர் படக்குழுவினரைப் படத்தின் விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் சந்தித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.வெற்றி உற்சாகத்தில் படக் குழுவினரும் கேக் வெட்டிக் காதலர் தினத்தைக் கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள்.