நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்படத்தின் முதல் காட்சி திரையில் ஓடத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘HIT: தி தேர்ட் கேஸ்’ ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தகர்த்து, முதல் நாள் வசூல் சாதனைகளை முற்றிலும் புதிய முறையில் மாற்றி அமைத்துள்ளது. சாதாரணமாக திரில்லர் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது அரிது. ஆனால் சைலேஷ் கொலானு இயக்கிய இந்த படம், தொடக்க நாளில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, நானியின் இதுவரை இருந்த அதிகபட்ச ஓப்பனிங் வசூலான ‘தசரா’வின் ரூ.38 கோடிகளை கடந்துள்ளது.
இந்த அதிரடி வசூல் வெறும் இந்தியாவில் மட்டும் இல்லை. வட அமெரிக்காவிலும் இந்த படம் $1 மில்லியனை கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி, நானி நடித்த படங்களில் மிக உயர்ந்த வசூலையும், ஒரே நாளில் இந்திய படங்களின் வசூலில் முதலிடத்தையும் பிடித்து, $1.18 மில்லியன் வசூலுடன் சாதனை படைத்துள்ளது.
முக்கியமான ரிலீஸ்கள் இல்லாத ஒரு மாதத்தில், ‘HIT 3’ தமிழ்த் திரையுலகத்திற்கும் இந்திய சினிமாவிற்கும் ஒரு புத்துயிர் ஊட்டும் படமாக மாறியுள்ளது. இது நானியின் முந்தைய ஹிட் படங்களைவிட மட்டுமல்லாமல், நேற்று வெளியாகிய அனைத்து இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளி, மொழி எல்லைகளைக் கடந்து, தலைசிறந்த முதல் நாள் வசூலைப் பெற்றுள்ளது.
மேலும், வரும் வாரங்களில் பெரிய படங்கள் இல்லாத சூழ்நிலையில், இப்படத்தின் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படத்தின் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நாளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே மிக அதிக அளவில் உள்ளன — இது ஒரு நாள் அதிசயமல்ல, இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் பிக்பாங் தொடக்கம்தான்!