தமிழ் ,பிரியங்கா, பிரசாத், உதயராஜ், ஹிட்லர்,வியட்னாம் வீடு சுந்தரம், மகாநதிசங்கர் நடித்துள்ளனர்.
சென்னையில் குப்பத்து வாலிபர்கள் நான்கு பேர் திருட்டு,செயின் பறிப்பு என்று வாழ்கிறார்கள்.அன்றாடம் ஜாலி, அவ்வப்போ து போலீஸ் லாக்கப் என்று ஓட்டுகிறார்கள், இவர்களில் தாமா ஒருவனுக்கு வசந்தா மீது காதல், அவளுக்கு இவன் திருடுவது பிடிக்க வில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஏதாவது மொத்தமாக திருடி செட்டிலாக ஆசைப்படுகிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள் இரண்டு கோடி கிடைக்கும் என்றுஅவர்கள் திருடிய டாலருக்குள் ஒருகாகிதம் கிடைக்க அதற்கான செயலில் இறங்குகிறார்கள். அதில் ஜெயித்தார்களா? கிக்கினார்களா என்பதே ‘வந்தாமல’ படத்தின் க்ளைமாக்ஸ்.
படம் தொடங்கும் போதே பழைய பராசக்தியின் ‘தேசம் ஞானம் கல்வி,’ பாடல் ஒலிக்கிறது. படம் ஏதோ வித்தியாச நிறம் என்று சொல்ல நினைக்கிறார்கள்.
தாமா, ஜான்சன், லூக்கா ஹிட்லர் என நான்கு திருடர்களாக நடித்துள்ளதமிழ் , பிரசாத், உதயராஜ், ஹிட்லர் நால்வரும் பலமுறை வெறுப்பேற்றினாலும் அவ்வப்போது ரசிக்கவும் வைக்கிறார்கள்.
படத்தில் பிரியங்கா விஸ்வருபம் எடுத்து நிற்கிறார். அந்த வசந்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். கோபம், பாசம், காதல், காமம் எல்லாமும் வெளிப்படுத்தியிருக்கிறார். வியட்னாம் வீடு சுந்தரம், மகாநதிசங்கர் கூட நினைவில் நிற்கின்றனர்.பாடல்கள் பரவாயில்லை.
சென்னையின் அடித்தட்டு இளைஞர்கள் நால்வரின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக காட்ட முயன்றுள்ளார் இயக்குநர் இகோர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். யாதர்த்தம் என்கிற பெயரில் ஆங்காங்கே இடம் பெறும் பச்சையான கொச்சையான வசனங்களை தவிர்த்திருந்தால் படத்தின் மேல் மதிப்பைக் கூட்டியிருக்கும். எப்படியாவது ஜெயிக்கவேண்டும் ‘வந்தாமல’ வராவிட்டால்’ —-‘என்று இயக்குநர் நினைத்து விட்டாரோ?