
படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :- இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநாயகனாக வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார்.

முதலில் விஷால் அவர்கள் மட்டும் படத்தில் பெரிய ஸ்டாராக இருக்கட்டும் மற்றவர்களை எல்லாம் புதியதாக நாம் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் முடிவெடுத்திருந்தேன். ஆனால் விஷால் சார் தான் படத்தை பெரியதாகவே நாம் பண்ணலாம். நீங்கள் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையே படத்துக்கு கொண்டு வாங்க , படம் நல்ல வரணும் அவ்வளவு தான் என்று எனக்கு கேட்டவற்றை எல்லாம் கொடுத்தார் விஷால். அவர் எனக்கு அளித்த ஊக்கம் மற்றும் சுதந்திரம் மிகப்பெரியது. எனக்கு விஷால் சாரிடம் பிடித்தது அவருடைய மல்டி டாஸ்கிங். ஒரே நேரத்தில் இங்கு படத்தில் நடித்துக்கொண்டிருப்பார் பின்பு நடிகர் சங்க வேலை , தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து , செக் கையெழுத்திடுதல் என ஒரு மனிதனால் இத்தனை வேலைகளை செய்ய முடியுமா என்று நம்மை வியக்க வைப்பார் ”என்றார் மித்ரன்.