
அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தில் அஜித் குமாரின் ‘கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்’ அணியின் ஒரு அங்கமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் [Amila Terzimehic ] . இது குறித்து அமிலா டெர்ஜிமெஹிக் பேசுகையில்,
” ‘விவேகம்’ போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெரிய பெருமை. இந்த வாய்ப்பினை எனக்களித்த இயக்குநர் சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஹோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குநர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்களித்தார் என அறிந்தேன். விவேகத்தில் எனது நடிப்பு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது .ஆக்ஷன் படங்களின் ரசிகையாக எனக்கு இயக்குநர் சிவா கூறிய ‘விவேகம்’ படத்தின் கதையும், அதில் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.
