தமிழுக்கு முற்றிலும் புதியவர்கள் ‘இலை ‘ படத்தில் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகவும் நடிகர் நடிகைகள் ஆகவும் அறிமுகம் ஆகிறார்கள்.
வாழ்க்கையின் முதல் அடி எடுத்து வைக்கும் ஒரு பெண்ணின் போராட்டங்கள் தான் இந்த ‘இலை’ படத்தின் மையக்கரு.
பெரிய படங்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படத்தில் மட்டும் தான் VFX எனப்படும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தி அற்புதமான காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் ‘இலை ‘ எனும் இந்த சின்ன பட்ஜெட் படத்தில் வரும் வி.எப்.எக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகவும் பலமாக இருக்கிறது.
வி.எப்.எக்ஸஸைப் பயன்படுத்தி காட்சி அமைப்பதன் வெற்றி என்பது அந்தத் தனிப்பட்ட காட்சிகளை மக்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் போதுதான் சாத்தியமாகிறது. அதே போல இந்த இலை படதிலும் மிக சிறப்பாக, யதார்த்தமாக வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
1990 காலகட்டத்தில் நடக்கும் கதை இது என்பதால் இந்த படத்துக்கு வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பம் மிகவும் பொருந்தியுள்ளது.
திருநெல்லி எனும் தமிழகக் கிராமத்தை மிக அழகாகத் திரைக்குக் கொண்டு வருவதில் இந்த படத்தின் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தப் படத்தில் வரும் நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள், அழகு நிறைந்த தோப்புகள், மலைப்பாதைகள் என பார்க்கும் அனைவரின் கண்களையும் கவரும் மிக அற்புதமான காட்சிகளை வி.எப்.எக்ஸ் மூலமாக யதார்த்தமாக உருவாக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரும் வி.எப்.எக்ஸ் இயக்குநருமான பினீஷ் ராஜ்.
ஒரு காலகட்டத்தின் கதை என்பதால் அந்த காலத்திற்கு ஏற்றவாறு காட்சிகளைப் படம்பிடிப்பது தான் புத்திசாலிதனம். மின்சாரக்கம்பிகள், மொபைல் டவர்கள் போன்ற நவீன முன்னேற்றம் எதுவும் தென்பட்டு விடாமல் படம்பிடிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிரமம்.
அந்த வகையில் இந்த இலை திரைப்படம் முழுதாக ஒரு காலக்கட்டத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நம்மை அதில் வாழ வைக்கிறார்கள்.
பினீஷ் ராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். சுஜித் ஸ்டேபானோஸ் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சுவாதி நாராயணன், சுஜித், கிங் மோகன், லிஜூ பிரகாஷ், சிவகுமார் குருக்கள், ஹக்கீம், மாஸ்டர் அஸ்வின் சிவா, கனகலதா, சோனியா, தேவு, ஸ்ரீதேவி அனில், ஸ்ரீஜா திருவல்லா, பேபி சோனியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல், படத்தொகுப்பு – டிஜோ ஜோசப், வசனம் – ஆர். வேலுமணி, இசை – விஷ்ணு வி. திவாகரன், பாடல்கள் – சௌமியா ராஜ், சண்டைப்பயிற்சி – கிருஷ்ண பிரகாஷ், ப்ரோஜக்ட் டிசைனர் – ஷோப குமார், பி. ஆர். ஓ – சக்தி சரவணன்,
ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ் ரிலீஸ் செய்கிறது.
இப்படம் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது.