
டோனி அண்ட் கய் நவீன சிகையலங்கார மையத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் நடைபெற்ற வண்ணமிகு பேஷன் ஷோ இத்தனை சிகையலங்காரங்களா என்று வியக்குமளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது.. கண்ணை கவரும் உடைகளுடனும், கருத்தை கவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும் மேடையில் வலம் வந்தனர். இந்த பேஷன் ஷோவுக்கு சிகரம் வைத்தார்போல் இருந்தது சிறப்பு அழைப்பாளரான ஜனனி அய்யரின் பங்கேற்பு.
நவீன நாகரீகத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தங்களது டோனி அண்ட் கய் ஷோரூம் விளங்குவதாக பெருமிதம் கொள்கிறது வேலூர் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூமின் ப்ரான்சைஸ்-ஆன வி2எச் குழுமம். 2800 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடமாய் பரந்து விரிந்து காணப்படும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை, நவீன வகை டாட்டூ போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
புத்தம் புதிய சிகையலங்காரங்கள், சிகை உதிர்வை தடுக்க அழகு கலைஞர்களின் அறிவுறுத்தல்கள் போன்றவையோடு திறப்பு விழா சலுகையாக 15 முதல் 20 சதவிதம் வரை அழகு சேவைகளில் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களை நீங்களே புதியவராக உணர வேண்டுமா.. வாருங்கள், மாற்றத்தை உணருங்கள்..
டோனி அண்ட் கய்-யில்..
மேலதிக விவரங்களுக்கு 416 6999911 / 416 6999922 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.: .