பரபரப்பான படங்கள் வரிசையில் இணையும் நோக்கில் உருவாகவுள்ள படம் ‘0 முதல் 1 வரை’.
இதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் யாசின். இவர், சினிமாவில் உதவி இயக்குநர் , விளம்பரப் படங்களில் இயக்குநர் எனப் பரவலான அனுபவங்களுடன் இப்படத்தின் மூலம் இயக்குநராகத் திரையில் கால் பதிக்கிறார். இப்படத்தை சிங்கு பிங்கு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘0 முதல் 1 வரை’ படம் பற்றி இயக்குநர் யாசின் பேசும்போது,
வித்தியாசமான கதைக்களத்தில் புதிய திரைக்கதை யுக்தியுடன் இப்படம் உருவாக உள்ளது. ஹரீஷ் – ரிச்சர்ட் இவர்களுடன் முன்னணி முகங்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்’’ என்கிறார் இயக்குநர் யாசின் .
கிராமம் நகரம், மாநகரம் என்று வருகின்ற ஊர்ப் பின்னணிகளுக்கு ஏற்ப மதுரை, ஆண்டிப்பட்டி. சென்னை என்று படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இந்தப்படத்தின் மூலம் சபீர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் சிங்கப்பூரில் இசைப்பள்ளி வைத்துள்ளார். ஆல்பங்களும் உருவாக்கியுள்ளார். இசை நுட்பத்துடன் ஒலி நுட்பமும் அறிந்தவர். . பாடல்கள் விவேகா, தனிக்கொடி.
ஒளிப்பதிவு பாபு குமார் ஐ.இ. இவர் ‘ஜீரோ’ படத்தின் ஒளிப்பதிவாளர்.படத்திற்கு வசனம் இயக்குநர் கே.எஸ்.நீலன்.
ஸ்டண்ட் அமைப்பவர் சக்தி சரவணன் .இவர், ‘பிச்சைக்காரன்’ ‘ஜில் ஜங் ஜக்’ படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர்.
இதன் கலை இயக்குநரான எஸ்.ராஜா மோகன் ‘மான் கராத்தே’,,’வலியவன்’, ‘கெத்து’ படங்களில் பணியாற்றியவர்..
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’படத்தில் பணியாற்றிய கே. எம். ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அலசி ஆராயும் ஒரு புதிய முயற்சிதான் இந்த ‘0 முதல் 1 வரை’ படம் .
பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.. ஒரே கட்டத்தில் தொடங்கி 45 நாட்களில் முடிக்கவுள்ளனர்.