இந்திய சினிமாவில் முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து ’கிரவுன்’ திரைப்படம் உருவாகிறது.இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் மற்றும் அரபிக் போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
இதில் கதாநாயகியாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார்,
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட், அரபிக், சைனா, சவுத் கொரியா போன்ற நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார் இவர் மலேசியாவில் செட்டிலான தமிழன் ஆவார்.
ஜோகி சர்மா,
பொன்சங்கர் மற்றும் கே.பி பிரபு ஆகிய மூவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள்.
இப்படத்திற்கு
இசை மரியா ஜெரால்டு, சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன், கலை இயக்குநர் ரேம்போன் பால்ராஜ்,எடிட்டர் J. ஜெய ராஜேந்திர சோழன்.
இதில் ஒளிப்பதிவாளர் பொன்சங்கர், தமிழில் தமிழன் என்று சொல் மற்றும் லிவிங் டுகெதர் என்ற படங்களின் இயக்குநர் ஆவார்
அதேபோல் எடிட்டர் J.ஜெய ராஜேந்திரசோழன் மீண்டும் வா அருகில் வா எனும் படத்தின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு வி.ஜானகிராமன் மேற்பார்வையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இயக்குநர் இப்படத்தைப் பற்றி கூறுகையில் ”விர்ச்சுவல் ரியாலிட்டி ஆக்குமெண்டெட் ரியாலிடி
விர்ச்சுவல் புரொடக்சன் ஆகிய தொழில் நுட்பங்களைப் பின்னணியாகக் கொண்டு படத்தை 3டியில் உருவாக்குகிறோம்”
இப்படத்தை கியுபிரேம் மூவி சார்பில் டாக்டர் அரவிந்த். K மற்றும் ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.