பெங்களூரில் நடைபெற்ற டென்பின் பவுலிங் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ்
3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் பெங்களூரில் நடைபெற்ற டென்பின் பவுலிங் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ்.
விளையாட்டுத் துறையில் சாதித்த பிரபல திரைப்பட கலை இயக்குநர் உமேஷ் குமார்!
3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கர்நாடக மாநில டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் சார்பில் நடத்தப்பட்ட 3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டி, பெங்களூர் சர்ச் ஸ்ட்ரீட் அமீபாவில் நடைபெற்றது. நவம்பர் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், கர்நாடகம், தமிழ்நாடு, மகராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, உத்தர் பிரதேஷ், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து 36 அணிகள் பங்கேற்றன.
இத்தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய, அக்ரமுல்லா பெய்க், ஹபீபுர் ரஹ்மான் மற்றும் உமேஷ் குமார் ஆகியோர் அடங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த ட்ரைடெண்ட் சூப்பர் கிங்ஸ், 211 உடன் முதல் ஆட்டத்தை முடித்து, 24 பின்களில் முதலிடத்தில் உள்ள குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றது.
2 வது ஆட்டத்தில், ட்ரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு 434-434 என போட்டி சமநிலை அடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் முறையில் (10-8) இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்று டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ்
தங்கப்பதக்கம் வென்றது.
இப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த குஜராத் ரோலர்ஸ் வெள்ளிப்பதக்கத்தையும், அரையிறுதியில் தோல்வியடைந்த பெங்களூர் ஹாக்ஸ் மற்றும் குஜராத் கிளாடியேட்டர்ஸ் அணிகள் வெண்கலப்பதக்கம் பெற்றன.