இயக்குநர் அருண் எழுதி இயக்கியுள்ள குறும்படம் ‘ஒருநாள்’. சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கமும் பெங்களூர் இன்னோவேடிவ் பிலிம் இன்டர்நேஷனலும் இணைந்து நடத்திய குறும்பட போட்டியில் இந்த குறும்படம் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் சிறந்த 25 படங்களில் ஒன்றாக இந்த ‘ஒரு நாள்’ குறும்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த திரைப்படக் கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களும் தங்களது கைத்தட்டல்கள் மூலம் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த குறும்படத்தில் லயோலா கல்லூரி மாணவரான யஸ்வந்த் மற்றும் நடனக் கலைஞர் தீபிகா இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களது நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது .
இந்த குறும்படத்திற்கு பெருமாள் மற்றும் அம்மு முத்து இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அர்ஜுன் இசையமைக்க, படத்தொகுப்பை சிவாவும், ஒலிக்கலவையை செந்திலும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த குறும்படத்தை பார்த்த இயக்குநர், எடிட்டர் பி.லெனின் இந்த படத்தை சிலாகித்து பாராட்டியதுடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் நடத்திவரும் BOFTA அகாடமியில் இந்த குறும்படத்தை திரையிட்டு மாணவர்களைப் பார்க்க வழிவகை செய்தார்.
அதுமட்டுமல்ல இயக்குநர் அருண் வெள்ளித்திரையில் படம் இயக்குவதற்காக அவருக்கு சில தயாரிப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.
அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.