உலக அளவில் பல்வேறு நாடுகளில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 16 சர்வதேச விருதுகளை பெற்ற ‘குழலி’ திரைப்படம் திரையரங்குகளை நோக்கி வருகிறது.
‘குழலி’ திரைப்படம் உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் விமர்சன ரீதியான திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது. அது மட்டும் இல்லாமல் சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகை என 16 விருதுகளை பெற்ற இப்படம் வருகிற 23ஆம் தேதியன்று திரைக்கு வர இருக்கிறது.
காக்கா முட்டை புகழ் விக்னேஷ் கதை நாயகனாகவும் ஆரா கதை நாயகியாகவும் நடித்திருக்கும் ‘குழலி’ திரைப்படம் முற்றிலும் கிராமத்து எதார்த்த முகங்களோடு சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு டி. எம். உதயகுமார் இசையமைக்க கார்த்திக் நேத்தா, தனிக் கொடி, ராஜா குருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுத ஷமீர் ஒளிப்பதில் வலுவான திரைக்கதை வசனத்துடன் உணர்வாக்கி இருக்கிறார் இயக்குநர் செரா. கலையரசன்.
இப்படத்தை கே.பி. வேலு, எஸ் .ஜெயராமன் மற்றும் எம்.எஸ். ராமச்சந்திரன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.’குழலி’ படத்தை மொழி திரைக்களம் நிறுவனம் வெளியிடுகிறது.