2025 கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் ‘பெருசு

ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் ஸ்டோன்பெஞ்சின் 16வது புரொடக்‌ஷனாக இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் புதிய படத்திற்காக கைக்கோத்துள்ளனர்!

இளங்கோ ராம் இயக்கத்தில் நடிகர்கள் வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் மற்றும் பிற திறமையான நடிகர்கள் நடித்திருக்கும் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் ‘பெருசு’. இந்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் குறித்து ஸ்டோன் பெஞ்சின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். கார்த்திகேயன் பேசியதாவது, “’பெருசு’ படத்திற்காக இயக்குநர் இளங்கோ ராமுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படத்தில் புதிய கதைசொல்லல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். முழுமையான பொழுதுபோக்குப் படமாக இது நிச்சயம் இருக்கும்” என்றார்.

தனது ஆக்கப்பூர்வமான கதை சொல்லல் மற்றும் புது திறமையாளர்களை அறிமுகப்படுத்துவதற்கு பெயர் போனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம். இந்த வரிசையில் ‘பெருசு’ படமும் அடங்கும். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா/தெலுங்கானா முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் ஈர்க்கக்கூடிய கதையாக இது உள்ளது. இந்த அற்புதமான திரைப்படம் 2025 கோடையில் திரைக்கு வர இருக்கிறது.