தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், அடுத்ததாக, மக்களுக்கு விருந்தாக வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை, விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களைப் பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர்.
தமிழ் சின்னத்திரையுலகில் தொடர்ந்து பல புதுமையான படைப்புகளை வழங்கி, மக்களைக் கவர்ந்து வரும், விஜய் தொலைக்காட்சியில், அடுத்ததாக இந்த பிப்ரவரி 17 முதல் ஒளிபரப்பாகி வருகிறது “தனம்” சீரியல்.
ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாரா விதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள், மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த தொடரின் கதை பயணிக்கிறது.
தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, Vj கல்யாணி, கிஷோர், அர்ஜுன், ஜெயஸ்ரீ, ரேணுகா, கோகுல், சமிக்ஷா சொர்ணா, மதன், ரவிவர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிப்ரவரி 17 முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த புதிய தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களான நிஜ ஹீரோக்களை கௌரவப்படுத்தும் விதமாக, தனம் சீரியல் குழுவினர் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்துக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் இத்தொழிலுக்கு வந்த தங்களின் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் படக்குழுவினர் கலந்துதுரையாடி, சிறு சிறு விளையாட்டுக்கள் விளையாடி, அவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த மொத்த நிகழ்வும் மிக இனிமையான, மகிழ்வுடன் கூடிய கொண்டாட்டமாக அமைந்தது.
இந்த நிகழ்வின் வீடியோ இப்போது வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
‘தனம்’ தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும். மதியம் 3 மணிக்கு உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் காணக்கிடைக்கிறது.