
ஆறு இயக்குநர்கள், ஆறு அத்தியாயங்கள், எல்லா அத்தியாயங்களுக்கும் க்ளைமாக்ஸில் தனித்தனி முடிவு என உலக சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகினரிடையேயும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இந்தப்படத்தில் பணியாற்றிய ஆறு இயக்குந ர்களுக்கும் தற்போது தனித்தனியாக படம் இயக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன.
இந்த ‘6 அத்தியாயம்’ படம் வெளியாவதற்கு முன்பே, இதில் ஆறாவதாக இடம்பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை பார்த்துவிட்டு, அதை இயக்கியுள்ள ஸ்ரீதர் வெங்கடேசனுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தில் முதல் அத்தியாயத்தை (சூப்பர் ஹீரோ) இயக்கிய கேபிள் சங்கர் ஏற்கனவே ஒரு பெரிய நிறுவனத்துடன் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இந்தப்படத்தில் 5வது அத்தியாயத்தை (சூப் பாய் சுப்பிரமணி) இயக்கியுள்ள லோகேஷ் இன்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரை தனது புதிய படத்திற்காக சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.