6 சர்வதேச விருதுகளை வென்ற கமர்ஷியல் படம்!

kanavuvaryam1இயக்குநர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்கு சீனா, கொரியா, ரஷ்யா, இத்தாலி, உக்ரைன், கென்யா நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதுவரை 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள இயக்குநர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் இந்தியா, அமெரிக்கா, சீனா, கொரியா, ரஷ்யா, இத்தாலி, உக்ரைன், கென்யா உள்ளிட்ட நாடுகளின் அங்கீகாரத்தையும் வென்றுள்ளது.

குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் அவசியம் பார்க்க வேண்டிய ஜனரஞ்சகமான திரைப்படமே ‘கனவு வாரியம்’. தமிழக கிராமங்களில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு குழந்தைகள் கொண்டாடும் வகையில் படமாக்கப்பட்ட கமர்ஷியல் திரைப்படம் ‘கனவு வாரியம்’, ஜீன் 11 முதல் 19 வரை சீனாவில் நடைபெற்ற 19 வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் பேராதரவுடன் 4 அரங்கு நிறைந்த காட்சிகள் திரையிடப்பட்டது.

‘கனவு வாரியம்’ திரைப்படம் ஜூலை 26 முதல் 30 வரை கொரியாவின் பூசான் சினிமா

ஹாலில் நடைபெற்ற ‘ஏசியன் நியூ மீடியா’ திரைப்பட விழாவிற்கு தேர்வானது.

விழா குழுவினரால் இயக்குனர் அருண் சிதம்பரம் தென் கொரியா அழைக்கப்பட்டிருந்தார்.

ரஷ்ய பயணம்

‘கனவு வாரியம்’ திரைப்படம் ஆகஸ்ட் 24 முதல் 28 வரை ரஷ்யாவில் நடைபெறும் ‘இண்டர்நேஷனல் மோட்டிவேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் BRIDGE OF ARTS’ திரைப்பட

விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இத்திரைப்பட விழாவில் பங்கேற்க இயக்குனர்

அருண் சிதம்பரம் ரஷ்யா செல்கிறார்.

கொரியா, இத்தாலி, உக்ரைன், கென்யா நாடுகளில் அங்கீகாரம்

மேலும் ‘கனவு வாரியம்’ திரைப்படம் செப்டம்பர் 16 முதல் 23 வரை வட கொரியாவில் நடைபெறும் ’15வது பியாங்யாங் சர்வதேச திரைப்பட விழாவிலும்’, செப்டம்பர் 21 முதல் 24 வரை உக்ரைனில் நடைபெறும் ‘சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிலும்’, அக்டோபர் 6 முதல் 9 வரை இத்தாலியில் நடைபெறும் ’67வது மோண்டிகேட்டினி திரைப்பட விழாவிலும்’, டிசம்பர் மாதம் கென்யாவில் நடைபெறும் ’11வது லோலா கென்யா திரைப்பட விழாவிலும்’ திரையிட தேர்வாகியுள்ளது.

kv22வென்ற விருதுகள்

இதுவரை இயக்குநர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் 6 சர்வதேச விருதுகளையும் 8 நாடுகளின் அங்கீகாரங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கனவு வாரியம்’ திரைப்படம் வென்ற விருதுகள் வருமாறு

1. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச

திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்டினம் ரெமி’

விருது

2. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் சிறந்த குழந்தைகள் பாடலுக்கான ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருது

3. 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த படத்திற்கான விருது (AUDIENCE FAVORITE  MOVIE)

4. அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் ‘17 வது பேர் போன்ஸ் சர்வதேச

திரைப்பட விழா’வில் விருது

5. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் & ஸ்கிரிப்ட் திரைப்பட

விழா’வில் விருது

6. மத்திய அரசால் நடத்தப்படும் ‘தேசிய அறிவியல் திரைப்பட விழா’வில்

(National Science Film Festival) சிறப்பு விருது

‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்கு அருண் சிதம்பரம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் இயக்குனர் அருண் சிதம்பரம் அமெரிக்காவில்

தனது மேற்படிப்பை (MS) முடித்துவிட்டு புகழ்பெற்ற வங்கியான ‘ஜே பி மார்கன்

சேஸில்’ (சிகாகோவில்) பணி புரிந்தார். அருண் சிதம்பரம், மறைந்த மக்களின்

ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களால் பெரிதும் பாரட்டப்பட்டவர்.

அருண் சிதம்பரம், ‘ஆணழகன்’ சிதம்பரத்தின் இளைய மகன். கடந்த நாற்பது ஆண்டுகளாக உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர். அ. சிதம்பரம் மறைந்த

.எம்.ஜி.ஆர் அவர்கள் உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு

உடற்பயிற்சி ஆலோசகர்.

இவரும், கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை  தயாரித்துள்ளனர். திரையிடப்பட்ட மேலை நாடுகளில் எல்லாம் மக்களின் ஏகோபித்த ஆதரவையும் குழந்தைகளின்
பாராட்டையும் பெற்றுள்ளது. ‘கனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில்
விரைவில் வெளிவருகிறது
.