கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய தனுஷ் படம் !

தனுஷ் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம்  “தனுஷ் 43 “

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். இந்த  படத்தை  தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய  கார்த்திக் நரேன் இயக்குகிறார் .
தனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி   பிலிம்ஸ் நிறுவனத்துடனும்  கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் .  

தனுஷ் -ராம்குமார்   திரைப்படம்  மெகா  பட்ஜெட் மற்றும்   முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் “தனுஷ் 43 ” அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது .

பொல்லாதவன் , ஆடுகளம் , மயக்கம் என்ன மற்றும்  அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு GV பிரகாஷ் 5 முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார் .

கதாநாயகி மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது .வரும் அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Dhanush 43 to be helmed by Karthick Naren and bankrolled by Sathya Jyothi Films