நோர்வே தமிழ்த் திரைப்பட விழா!

தமிழ்நாட்டுத் தினநாளில் தமிழ்நாட்டுக்கான – தமிழர் விருதுகளை அறிவிக்கின்றோம் !


12வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா இந்த ஆண்டு ஒரு நாள்(04.09.2021) திரையிடல் நிகழ்வு மட்டுமே நடைபெற்றது. கொரோனா கிருமித்தொற்று  நான்காவது அலை ஆரம்பித்திருக்கும் நிலையில், நோர்வே சுகாதார அமைச்சின் உடைய  விதிமுறைகளுக்கு ஏற்ப திரையிடல் நிகழ்வு நடந்து முடிந்தது .  சில திரைப்படங்களின் திரையிடல் அடுத்த ஆண்டுக்கான திரைப்படங்களோடு நடைபெறும்.


தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் – காணொளிகள் முழுநீளத் திரைப்படங்களுக்கு  தமிழர் விருதுகள்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இன்று தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு(2020) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட படங்கள்,  தமிழர் விருதுகளை பெறவுள்ள  தமிழக கலைஞர்களின் விவரங்களை அறிவிக்கின்றோம். 


2020 இல் பெரும்பலான திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களிலே வெளியாகி இருந்ததை அறிந்திருப்பீர்கள். இது எமக்கு கொஞ்சம் சிரமமாகவே அமைந்தது.இருந்த போதிலும் அவற்றில் இருந்து நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது  போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட படங்கள் பின்வருவன. 


NTFF 2021 தமிழ் நாட்டுத்  திரைப்படங்களுக்கான பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 20 திரைப்படங்கள்


01.மாறா – திலீப்குமார் 
02.சூரரைப் போற்று  – சுதா கொங்காரா 

03.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – தேசிங் பெரியசாமி

  04.ஓ மை கடவுளே  – அஸ்வத் மாரிமுத்து 

05.சைக்கோ – மிஷ்கின்

 06.காவல்துறை உங்கள் நண்பன் – ஆர்.டி.எம் 

07.க/பே  ரணசிங்கம்  – பி.விருமாண்டி

 08.அந்தகாரம்  – வி.விக்னராஜன்

 09.லாக் அப் – எஸ்.ஜி.சார்லஸ் 

10.தாராள பிரபு  – கிருஷ்ணா  மாரிமுத்து 

11.ஜிப்ஸி – ராஜீ முருகன்

 12.மாஃபியா சாப்டர் 1  – கார்த்திக் நரேன் 

13.பென்குயின் – ஈஸ்வர் கார்த்திக் 

14. சியான்கள்   – வைகறை பாலன் 

15. பாரம் – பிரியா கிருஷ்ணசாமி

 16. செத்தாலும் ஆயிரம் பொன் – ஆனந்த் ரவிச்சந்திரன்

 17. பொன்மகள் வந்தாள் – ஜெ.ஜெ.பிரெட்ரிக்

 18.கன்னி மாடம்  – போஸ் வெங்கட்

 19. கல்தா – எஸ்.ஹரி. உத்ரா  

20.வானம் கொட்டட்டும் – தன சேகரன்