ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி சங்கர், அபிநயா சதீஷ்குமார் நடித்துள்ளனர்.எஸ்.ஏ.பிரபு இயக்கி உள்ளார். இசை விஜய் சித்தார்த்,
ஒளிப்பதிவு மனீஷ் மூர்த்தி, எடிட்டிங் நாகூரான்.
ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் தயாரித்துள்ளனர்.
இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசும் முயற்சியில் கதாநாயகன் ஈடுபடுகிறான்.அப்படி இறந்த ஒருவரின் நாடியோடு பேச முற்படும் போது அது விபரீதமாக மாறுகிறது அதன் விளைவு என்ன என்பதை சொல்லும் படம் தான் ஸ்ட்ரைக்கர்.
படத்தின் ஆரம்பத்தில் ஆன்மீகமும் அறிவியலும் ஒன்று என்று விளக்கம் தரப்படுகிறது .அஷ்டமா சித்திகள் மூலம் இப்போதைய அறிவியல் சாதனைகள் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் அப்போதே சித்தர்கள் செய்து விட்டதாகச் சொல்கிறார்கள்.படத்தில் பாரா சைக்காலஜி பற்றி பேசப்படுகிறது.அதைக் கணிப்புகளுக்கு எட்டாத மனோதத்துவம் என்கிறார்கள். பிறகு சில சாதாரண காட்சிகளுடன் படம் தொடங்குகிறது. ஆவிகளுடன் பேசும் ஒருவரைப் பேட்டி எடுக்க யூடியூபரான கதாநாயகி வருகிறார். ஹோய்ஜா போர்டு மூலம் இறந்து போன ராஜேந்திரன் ஆவியோடு பேச ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஆவியுடன் பேசும் முயற்சியை நாயகன் தொடரும்போது அந்த ஆவி கதாநாயகி உடம்பில் புகுந்து அவர் குரலில் பேசி எச்சரிக்கிறது. பிறகு அந்த முயற்சியில் ஈடுபடும் நாயகன் நாயகியை ஆவி ஆட்டி வைக்கிறது முடிவு என்ன என்பதுதான் இப்படம்.
ஆவியை வரவழைத்து ஆவிகளுடன் ஆவியுடன் பேசும் காட்சிகளில் பரபரப்பையும் பதற்றத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார்கள்.
அதன்பின் ஆதி ஆவி செய்யும் விபரீத செயல்கள் மூலம் படம் ஹாரர் படம் போல் மாறிவிடுகிறது.
படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் படத்தின் தன்மையைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறது.
ஆவிகளுடன் பேசும் ஓர் அம்சத்தை மட்டுமே பிரதானப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் நகாசு வேலைகள் செய்திருந்தால் இந்தப் படம் முழுமையான த்ரில்லர் படமாக மாறி இருக்கும்.
எனவே படக்குழுவினருக்குக் கைகட்டிய தூரத்தில் உள்ள பூவைப் பறித்த அனுபவம் கிடைத்திருக்கிறது. பார்வையாளர்களுக்கும் தான்.