‘ஹிட்லர்’ திரைப்பட விமர்சனம்

விஜய் ஆண்டனி, ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ் ,ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, இயக்குநர் தமிழ் ,ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர்.தனா எஸ்.ஏ எழுதி இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு நவீன் குமார். ஐ, இசை விவேக் – மெர்வின், கலை இயக்கம்  சி..உதயகுமார், படத்தொகுப்பு சங்கத்தமிழன் ஈ ,தயாரிப்பு டி.டி ராஜா, டி .ஆர் . சஞ்சய் குமார்.

விஜய் ஆண்டனி வெளியூரிலிருந்து சென்னை வந்தவர்.சென்னையில் ஒரு தனியார் வங்கியில்வேலை பார்க்கிறார்.
.அவரது அறைவாசி ரெடின் கிங்ஸ்லி .இன்னொரு பக்கம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசியல்வாதி சரண்ராஜ் அவர் வருகிற தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாய நெருக்கடியில் உள்ளார். தொகுதி மக்களுக்குப் பணத்தை வாரி இறைக்கிறார். அதற்காக ஏராளமான பணத்தைக் கொண்டு வருகிறார். திடீரென்று அந்த பணம் காணாமல் போய்விடுகிறது .சரண்ராஜ் ஆட்கள் மூன்று பேர் கொலை செய்யப்படுகிறார்கள்.
காவல்துறை விசாரணை அதிகாரியாக கௌதம் மேனன் வருகிறார்.செய்யப்பட்ட கொலைகளில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அதுவரை புழக்கத்தில் இல்லாததாக இருக்கிறது.புலனாய்வில் இறங்குகிறார் மேனன். இன்னொரு பக்கம் விஜய் ஆண்டனிக்கும் ரியாசு மனுக்கும் சந்திப்பில் காதல் மலர்கிறது.ஒரு பக்கம் காதல் இன்னொரு பக்கம் க்ரைம் இரண்டையும் இணைக்கிற அரசியல் என்று செல்கிற கதையின் முடிவு என்ன என்பதுதான் ஹிட்லர் படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.

விஜய் ஆண்டனி வழக்கத்தில் இருந்து சற்று வெளியே வந்து நடித்துள்ளார். அவரது தோற்றத்திலும் சரி நடிப்பிலும் சரி அந்த வித்தியாசத்தை உணர முடிகிறது.காவல்துறை அதிகாரியாக கௌதம் மேனன் தனது ஸ்டைலான நடிப்பின் மூலம் சற்றே கவனம் பெறுகிறார்.
நாயகி ரியா சுமன் ஒரு ஆக்சன் கதையில் வரும் கதாநாயகியின் வேலையைச் செய்துள்ளார்.
நகைச்சுவை செய்வதற்காக ரெடின் கிங்ஸ்லி முயன்றுள்ளார். சில இடங்களில் மட்டும் அது ஒர்க் அவுட் ஆகி உள்ளது. விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.

எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிகர் சரண்ராஜ் மற்றும் இயக்குநர் தமிழ் நடித்துள்ளார்கள்.ஆக்சன் படங்களில் வரும் வில்லன்களின் டெம்ப்ளேட்களில் அவர்கள் பொருந்தி உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

ஒரு படத்தில் உள்ளாதிக்கம் செலுத்தும் திரைக்கதை ஆசிரியரின் வேலை எப்படி உள்ளது என்று பார்த்தால், அதற்கு கதாநாயகனின் பாத்திரச் சித்தரிப்பும் அதற்கான பின்னணியும் சற்று சுவாரஸ்யம் தருவதாக இருக்கிறது.

ஒரு பக்கம் கிரைம் இன்னொரு பக்கம் ரொமான்ஸ் இரண்டும் எப்போது இணையப் போகிறது என்பது படம் பார்ப்பவர்களுக்குத் தெரியத்தான் செய்யும். ஆனால் அதை இணைக்கும் விதத்தில் கதை செல்லும் பாதையில் பல முடிச்சகளை வைத்து அவிழ்ப்பது சற்று புதிதாக இருந்தது.படத்தில் வரும் அந்த திருட்டு சம்பவம் காட்டப்பட்டுள்ள விதம் சுவாரசிய சாம்பிள்.

இப்படிப்பட்ட கதைகளுக்கு இடையில் வரும் பாடல்கள் ஒரு வேகத்தடை தான். அந்தக் குறையை பின்னணி இசையில் இசையமைத்த விவேக் மெர்வின் சரி செய்து சமன் செய்துள்ளனர்
கௌதம் மேனனின் புலனாய்வுக் காட்சிகளை மேலும் சுவாரஸ்யப் படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்தப் படம் விஜய் ஆண்டனியின் வித்தியாசமான தோற்றத்தில் வந்துள்ள ஒரு முழு நீள வணிக ரீதியிலான படம் எனலாம்