‘தேவரா’ திரைப்பட விமர்சனம்

பேன் இந்தியா திரைப்படம் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பெரிய பட்ஜெட்டில் வந்துள்ள படம் தான் ‘தேவரா’.ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ தந்த பெரிய வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தனித்து களமிறங்கியுள்ள படம் ‘தேவரா: பார்ட் 1’. இப்படத்தை
‘ஆச்சார்யா’ இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கியுள்ளார்.

நான்கு கடலோரத்துக் கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மக்களுக்கு பயமே என்னவென்று தெரியாது.ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவர் இருக்கிறார்.அதில் ஒருவர் தான் தேவரா.அதாவது ஜூனியர் என்டிஆர் .அவரை அனைவரும் மதிக்கிறார்கள்.அவர் சொல்படி மற்ற கிராமத்தினரும் நடந்து கொள்கிறார்கள்.அரசியல்வாதி ஒருவர் சொல்லும் ஒரு கடத்தல் வேலையை அதன் பின்னணி புரியாமல் அந்த மக்கள் செய்கிறார்கள். ஒருகட்டத்தில் தாங்கள் செய்வது ஆயுதக் கடத்தல் என்பது தெரிகிறது. இதற்கு தேவரா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
மற்றவர்களையும் இனி அந்த வேலையைத் தொடரக் கூடாது எனத் தடுக்கிறார்.

சைஃப் அலிகான் மற்றொரு கிராமத்தின் தலைவர் மட்டுமல்ல தேவராவின் நண்பரும் கூட.தேவரா தடுப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குறுக்கே நிற்கும் தேவராவைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார். அதனை அறிந்த தேவரா மாயமாக மறைந்து விடுகிறார்.இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம்,பல ஆண்டுகள் கழித்து தேவராவின் மகன் வரா தந்தையைப் போல் வீரனாக இல்லாமல் கோழையாக வளர்கிறார்.ஒரு கட்டத்தில் அவருக்கு வீரம் வந்ததும் காதலிக்க ஆசைப்படுகிறார். கடைசியில் அவருக்கு வீரம் வந்ததா இல்லையா என்பதே ‘தேவரா’ படத்தின் திரைக்கதை.

படத்தில் நாயகன் அறிமுகக் காட்சியில் ஆர்ப்பரிக்கும் கடலில் டால்பின் போல சீறியபடி வெளியே வருகிற ஜூனியர் என்டிஆர்,ப்பா-மகன் வேடங்களில் அசத்தியுள்ளார். அதிலும் அப்பாவாக வரும் தேவாரா குற்ற உணர்வுடன் ஆரம்பத்தில் வேலை செய்தாலும், அவர் மாறும் இடத்திலிருந்து அந்த ஊருக்காக அவர் செய்யும் வேலைகள் என மகனை மிஞ்சி ரசிகர்கள் மனதில் நிற்கின்றார்.வீரனின் கோழையான மகன் பாத்திரத்திலும் ரசிக்க வைக்கிறார்.

கடல் சார்ந்த கதை என்பதால் ஆரம்பத்திலேயே கப்பலில் கொள்ளை அடிக்கும் காட்சி சரியான ஆக்‌ஷன் விருந்து தான்.

அதோடு ஆயுதங்களைத் தங்கள் ஊருக்கு எடுத்துச் செல்ல வைக்கப்படும் சண்டைக்காட்சி பரபரப்பானது.ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு நிறைய விருந்து படையல் வைத்துள்ளனர்.

பரபரப்பு ஆக்சன் விருந்து என்கிற ரீதியில் செல்கிற படம் லாஜிக்குகளுக்கு இடம் கொடுக்கவில்லை.சுறா மீனிலேயே கயிறு கட்டி குதிரை சவாரி செய்கிறார் குட்டிப்புலி NTR.

ஜான்வி வழக்கம் போல காட்சிப் பொருள் போல் வந்து ஆக்சன் படத்திற்கான கதாநாயகிக்கான இடத்தை நிரப்பி இருக்கிறார்.
பெரிய கேன்வாஸில் உருவாக்கப்பட்ட’கேஜிஎஃப்’, ‘பாகுபலி’ போன்ற படங்களிலும் இந்த ஹீரோயிச மசாலா அம்சங்கள் உண்டு என்றாலும் அவை நம்பும் படி செய்யப்பட்டன.தேவராவின் அது இல்லை எனவே காட்சிகள் மிகை படுத்தல்களாகவே தோன்றுகின்றன.

ஆயுதங்களை தங்கள் ஊருக்கு எடுத்துச் செல்ல வைக்கப்படும் சண்டைக்காட்சி பரபரப்பானது.ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு நிறைய விருந்து படையல் வைத்துள்ளனர்.பரபரப்பு ஆக்சன் விருந்து என்கிற ரீதியில் செல்கிற படம் லாஜிக்குகளுக்கு இடம் கொடுக்கவில்லை.சுறா மீனிலேயே கயிறு கட்டி குதிரை சவாரி செய்கிறார் யங் டைகர் NTR.  

உணர்ச்சிகரமான காட்சிகளை ஜூனியர் என்டிஆர் ஈர்க்கிறார்.வில்லனாக சைஃப் அலி கான். ஆரம்பம் முதலே அவரை விட நாயகன் வலிமையானவர் என்று காட்டப்படுவதால் அவர் கவனம் பெறாமல் போய்விடுகிறார்.

கேஜிஎஃப் பட பாணியில் ஃப்ளாஷ்பேக் சொல்லும் தாத்தா கேரக்டரில் பிரகாஷ்ராஜ் வருகிறார். அதை தாண்டி அவருக்குப் பெரிதாகப் படத்தில் வேலையில்லை.

மொழிக்கு ஒன்றாக நடிகர்களைப் பொறுக்கிப் போட்டு நடிக்க வைத்துள்ளார்கள்.கலையரசன், சைன் டாம் சாக்கோ போன்ற நல்ல நடிகர்களுக்கு சிறு சிறு கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளனர்.

படத்தின் பெரிய பலம் ரத்னவேலுவின் ஒளிப்பதிவும் அனிருத்தின் இசையும்.இவர்கள் இருவருமே படத்தை பெரும்பாலும் தூக்கி நிறுத்துகின்றனர்.பிரம்மாண்டத்திற்கு ஏற்ற விழிகளை விரிய வைக்கும் காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு.நீரடிக் காட்சிகள் ஒரு சாம்பிள்.இசையமைத்துள்ள அனிருத் பின்னணியில் தெறிக்க விடுகிறார்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் மகன் ஜூனியர் என்டிஆர் கதாப்பாத்திரம் பழைய படங்களை நினைவூட்டுகிறது.
வீரனான அப்பா, கோழை மகன் என அதே சாயல்.காட்சிகள் அளவிற்கு திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படமும் பான் இந்தியா படம்என்று மாறி இருக்கும். அதைத் தவற விட்டதால் முழு நீள ஆக்ஷன் மசாலாப் படமாக மாறிவிட்டது இந்த ‘தேவரா’.

தெலுங்கு சினிமாவில் பாகுபலியின் பாதிப்பு இருப்பதைச் சில காட்சிகள் நினைவூட்டுகின்றன.மொத்தத்தில் ஆக்ஷன் பட பிரியர்களுக்கு ஏற்ற முழு நீள விருந்து. ஆக்‌ஷன் விரும்பிகள் தேவராவிற்கு சென்றால் ஏமாற மாட்டார்கள்.