நடிகர் காளிதாஸ் ஜெயராம் – தாரிணி காலிங்கராயர் திருமண விழா : முதல்வர் வாழ்த்து!

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் – தாரிணி காலிங்கராயர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பின்னர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, கமலின் ‘விக்ரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் – தாரிணி காலிங்கராயர் திருமணம் கேரளாவில் குருவாயூர் கோயிலில்  நடைபெற்றது. இதில் நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் மற்றும் அவரது மனைவி டி.வீணா மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற மணமக்களுக்கான வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்தினார்.