சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குநராகவும் அறியப்பட்டார். இதைத் தொடர்ந்து ‘சார்’ என்ற படத்தை இயக்கினார். இதில் விமல் நாயகனாகவும் சாயாதேவி நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். வில்லன் கதாபாத்திரத்தில் சிராஜ் நடித்து இருந்தார்.
இனியன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு, ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய, சித்து குமார் இசையமைக்க மற்றும் கலை பணிகளை பாரதி ஆகியோர் செய்திருந்தனர்..
எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிட்டது.
இந்த படம் அக்டோபர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பரம்பரையின் அர்ப்பணிப்பை அழகான பாடமாக உணர்த்தியது.
இப்படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதளவில் பாராட்டினர்.. மேலும் மக்களிடையே இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன.
மேலும் ‘நாம் தமிழர் கட்சி’ சீமான் மற்றும் ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி’ திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி இருந்தனர். குறிப்பாக கல்வியால் தான் எளிய மக்கள் மேன்பட முடியும் என்பதை பேசுகின்ற ஒரு திரைப்படம் என வாழ்த்தினர்.
இந்த நிலையில் இந்த படம் தற்போது அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் பார்க்காத பலரும் தற்போது ஓடிடி தளங்களில் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.