22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் இன்று (12.12.2024) சென்னை, இராயப்பேட்டை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் தமிழ்நாடு அரசின் ஆதரவுடன், இந்தோ சினி அப்ரிசியேசன் ஃபவுன்டேசன் சார்பில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை (22-nd Chennai International Film Festival) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் தலைவர் திரு. சிவன் கண்ணன், இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான திரு.ஏ.வி.எம்.சண்முகம், துணைத் தலைவர் திரு.ஆனந்த் ரங்கசாமி, திரைப்பட இயக்குனர்கள் திரு கே பாக்யராஜ், திரு பார்த்திபன், நடிகைகள் திருமதி பூர்ணிமா பாக்யராஜ், திருமதி குஷ்பு மற்றும் திரைப்படத் துறை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.