தனுஷ் ஒரு ரௌடி கூட இரண்டு பேரை வைத்துக் கொண்டு மாமூல் வாங்கி கம்பீரமாகத் திரிகிறார். அவருக்குப் பின்புலமாக சந்தனமரம் கடத்தும் தொழில் செய்யும் தாதாவாக சண்முகராஜன் .
மாரி மீதுள்ள பழைய கொலைக் கேஸை எடுத்து மாரியை சுற்றி வளைக்கத் திட்டமிடுகிறார் புதிதாக வந்த எஸ்.ஐ. விஜய் ஜேசுதாஸ். திட்டமிட்டு உள்ளேயும் தள்ளுகிறார். போட்டிக்கு இன்னொரு ரவுடி வந்து விடுகிறான். மீண்டும் எப்படி மாரி தன் ரௌடி சாம்ராஜ்யத்தை மீட்கிறான் என்பதே கதை.
மாரியாக முறுக்கிய மீசையும் துடுக்கு வசனமுமாக தோற்றத்தில் பளிச்சிடுகிறார் தனுஷ். .ஆனால் அவரது நடிப்பு பசிக்கு சோளப் பொரியல்ல கேழ்வரகு பொரிதான் இயக்குநர் போட்டுள்ளனர்
சாட்சாத் தமிழ்ப்பட நாயகியாக கறிவேப்பிலை போல காஜல் அகர்வாலைப் பயன் படுத்தியுள்ளனர்.
போலீஸ் எஸ்.ஐ. விஜய் ஜேசுதாஸ் இனி நடிக்கலாம். நம்பிக்கை தருகிறார்.மாரியை விட உடன் வரும் ரோபோ சங்கர், அடிதாங்கி இருவரும் ரசிக்க வைக்கிறார்கள்.
அனிருத் ஒரு காட்சியில் வந்து ஆடுகிறார். ஆனால் பாடல்களில் கோட்டைவிட்டு விட்டார்.எடுத்துக்கொண்ட கதையில், காட்சிகளில் புதுமை இல்லையே.இரண்டு செட்டை வைத்து மொத்த படத்தையும் முடித்து விட்டார்கள்.
புறா பந்தயம் என்கிறார்கள் ஒரு முறை கூட அதை முழுமையாக் காட்டவில்லையே. ஒரு தேசிய விருது பெற்ற நடிகரை வைத்துக் கொண்டு அரதப்ழய கதையை அரை வேக்காட்டு திரைக்கதையுடன் கொடுத்துள்ள இயக்குநர் பாலாஜி மோகன் ‘படங்களில் சொதப்புவது எப்படி? என்று பாடம் எடுத்து விளக்கி இருக்கிறார். இனி அவர் எங்காவது போனால் ‘வாயை மூடிப் பேசவும்’.