“ நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் “ என்று நட்பை பற்றி ஆழமாக பேசும் நாடோடிகள் , ஈட்டி எனும் ஸ்போர்ட்ஸ் படம் ,மிருதன் எனும் ஜாம்பி படம் , சிம்பு நடிப்பில் உருவாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஜனரஞ்சகமான திரைப்படம் என வெவ்வேறு களங்களில் பயணிக்கும் வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட்.
இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா சோடி , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் இவர் இயக்குநர் செல்வ ராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெறவுள்ளது