மெட்டி ஒலி டீவி சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் போஸ் வெங்கட்.
டீவி சீரியல் மூலம் அறிமுகமான இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஆசிர்வாதத்தில் அவரது ஈரநிலம் படத்தில் வில்லனாக திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
தற்போது 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் ரஜினியுடன் சிவாஜி முதல் சூர்யாவின் சிங்கம் வரை அனைத்து பெரிய நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.
சுந்தர் சி யின் நகரம் மற்றும் சிங்கம், சிவாஜி, கோ, யான் போன்ற படங்களில் மிக முக்கிய பாத்திரங்களில் கவனம் ஏற்படுத்தினார். பல படங்களில் திருப்புமுனை பாத்திரங்களில்
நடித்திருக்கும் இவர் தற்போது வெளியாகியிருக்கும் கவண் படத்தில் முதன்முறை முழுமையான வில்லன் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
சினிமா வாழ்வில் திருப்புமுனையை ஏர்படுத்தியிருக்கும் இந்த பாத்திரம் ரசிகர்களிடம் மட்டுமில்லாது சினிமா துறையினரிடமும் பெரிய அளவில் பாராட்டுப் பெற்றுள்ளதில் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதற்கு பிறகு தன்னை நம்பி மிக முக்கிய பாத்திரங்கள் வரும். அந்த நம்பிக்கையை இந்தப் கதாபாத்திரம் மூலம் கே.வி.ஆனந்த் ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்தவர்.
பிரகாஷ்ராஜ் செய்ய வேண்டிய இப்பாத்திரம் அவர் செய்ய முடியாத காரணத்தால் நான் செய்ய வேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டது இதனால் தன்னை முழுவதுமாக முன் மண்டையை மழித்து தன் உருவத்தை மாற்றிச் சென்று கே வி ஆனந்திடம் இந்த வாய்ப்பைப் பெற்றேன் என்றவர் இப்போது ரசிகர்கள் பாராட்டில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
சிறு சிறு பாதிரங்கள் நிறைய செய்து விட்ட பிறகு இப்போது நிறைய பெரிய பாத்திரங்கள் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகர் கார்த்தியுடன் தீரன் படத்தில் படம் முழுதும் வரும் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும் அந்தப் பாத்திரம் இன்னும் ரசிகர்களிடம் தன்னை நெருக்கமாக கொண்டு செல்லும் என்று தெரிவிக்கிறார். அதைத் தொடர்ந்து முழுக்க ஹியூமரான ஒரு கேரக்டரில் ஒரு படமும் செய்து வருகிறாராம்.
கவண் படத்தின் அடையாளத்திற்கும், ரசிகர்களின் அன்பிற்கும், தொடர்ந்து தன்னை கவனித்து பாராட்டிய அனைத்து பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்–