வரும் 22 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிற ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் ஊடக சந்திப்பு சென்னை க்ரெளன் பிளாசா ஹோட்டலில் நடந்தது.
விஜய் தேவரகொண்டா – ரீத்து வர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தை தமிழில் ‘Oh மணப்பெண்ணே’ என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வரும் 22ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர்பேசும்போது ,
“இதுவரை பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரு ஹீரோயினாக நடித்தேன். ஆனால் Oh மணப்பெண்ணே படம் என்னுடைய திரைப்படம் என பெருமையாகக் கூறிக் கொள்வேன் என அவர் தெரிவித்தார். அத்துடன் தமிழுக்கு தகுந்த மாதிரி சில மாற்றங்கள் செய்து இந்த படத்தை உருவாகியுள்ளனர்”என்றார்
அவரை தொடர்ந்து பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், “இந்த படத்தின் கதை என் வாழ்க்கைக்கு நெருக்கமான கதை. படித்துவிட்டு இலக்கில்லாமல் திரியும் ஒரு வாலிபனாக நானிருந்தேன். எப்படியோ இங்கு வந்து நான் சேர்ந்திருக்கிறேன்,இந்த திரைப்படத்தை 2018ஆம் ஆண்டு ரீமேக் செய்யவேண்டிய நிலை இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனது. பிறகு பல்வேறு தயாரிப்பாளர்கள் மாறி இறுதியாக தற்போது Oh மணப்பெண்ணே திரைப்படம் உருவாகி உள்ளது” எனக் கூறினார்.

“இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திபடுத்தும் “என இயக்குநர் கார்த்திக் சுந்தர் கூறினார்.
இந்த நிகழ்வில் படத்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மற்றும் குழுவினரை ஹரிஷ் கல்யாண் அழைத்துப் பாராட்டிக் கெளரவித்தார்.