“தர்மதுரை” படத்தில் விஜயசேதுபதியின் தம்பியாகவும், “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தில், யங் டிராபிக் ராமசாமியாகவும் அனைவராலும் பாராட்டப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார், நடிகர் சௌந்தரராஜா. “கத்திச்சண்டை” படத்தில் விஷாலின் நண்பனாகவும், “கள்ளன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், “ஒரு கனவு போல” படத்தில் கதைநாயகர்களில்ஒருவராகவும் நடித்துள்ளார் சௌந்தரராஜா. அடுத்தடுத்து படங்கள் வெளியாவது ஒரு பக்கம் இருக்க, நாயகனாக நடிக்க கதைகள் வந்துகொண்டிருப்பதில் மிக உற்சாகமாக இருக்கிறார். ஆனால், ஒரு கனவு போல படத்திலும் மற்றும் “கள்ளன்” படத்திலும் சௌந்தரராஜாவின் கேரக்டர் பற்றி கசிந்துள்ள தகவல்கள் அவரை பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. அது பற்றி சௌந்தரராஜாவிடம் கேட்டபோது, “ஒரு கனவு போல” படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜாசார், பாக்கியராஜ் சார்… படங்கள் போல கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக சித்தரிக்கும் படங்கள் இப்போது வருவதே இல்லை. “ஒரு கனவு போல” அப்படிஒரு படமாக இருக்கும். கதாபாத்திரங்களுக்குள் ஏற்படுகிற உளவியல் பிரச்சினைகளை அழகாக சொல்லி இருக்கிறார் ’ஒரு கனவு போல’ படத்தின் இயக்குநர் விஜயசங்கர் சார். “ஒரு கனவு போல” படத்தில் என் கேரக்டர், கள்ளனா? காதலனா? என்பதைப்பற்றி இப்போதைக்கு நான் வெளியே சொல்லமுடியாது. படம்பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள். இயக்குநர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை இயக்குநர் சந்திரா அக்காவின் “கள்ளன்” படம் நிரூபிக்கும். “கள்ளன்” படத்தில்,நடித்தது நிஜமாகவே பெருமையான விசயம். .“ஒரு கனவு போல”,“கள்ளன்” இரண்டு படங்களுமே மிகவும் பேசப்படுகிற படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் என் கதாபாத்திரங்களும் பேசப்படும்.ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி, என்னை ஹீரோவாக, வில்லனாக எப்படி நடிக்கஅழைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் உடனடியாக சம்மதிப்பேன்.
நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை! நடிகர் சௌந்தரராஜா Read More