சிறந்த விளம்பரங்களுக்கான TEA Award 2015 விருது குறித்த செய்தியாளர் சந்திப்பு, லோகோ அறிமுகம் மற்றும் விளம்பர தூதர்களை அறிமுகபடுத்தும் விழா இன்று M.O.P. வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
சிறந்த ஊடக விளம்பரங்களுக்கான விருதுகளை வழங்குவதற்காக TEA விருது விழா அக்டோபர் 22- ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இவ்விருதின் லோகோ-வை இந்தியாவுக்கான மலேசிய தூதர் சித்ரா தேவி ராமையா அறிமுகபடுத்தினார். விளம்பரங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்லைன் வாக்களிப்பை வின்சென்ட் அசோகன் மற்றும் ஜெகன் தொடங்கி வைத்தனர்.
இதில் M.O.P வைஷ்ணவ் கல்லூரியின் முதல்வர் டாக்டர். லலிதா பாலகிருஷ்ணன் உடனிருந்தார். www.edisonawards.in என்ற இணைய தளத்தில் பொதுமக்களும் தங்களுக்குப்பிடித்த விளம்பரங்கள் மற்றும் அதில் நடித்தவர்களுக்கு வாக்களிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் தியாகராஜன் ,ஜெகன், ஆதவன் , வின்சென்ட் அசோகன் , விஜய் சந்தர், நடிகர்சந்திரன், தமன், அப்சரா மற்றும் பல திரைப்பட பிரமுகர்கள், இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் இக்கல்லூரியின் மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். லோகோ வெளியீடுமற்றும் ஆன்லைன் வாக்களிப்பில் விளம்பரத்தை பார்க்கும் போது மாணவிகள் கரகோஷங்களை எழுப்பினர்.
தொலைக்காட்சிகளில் இன்றைக்கு நிகழ்ச்சிகளை விட மிக சுவாரஸ்யமாகத் திகழ்வதுவிளம்பரங்களே. காரணம், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் விளம்பர இடைவெளியில்பார்வையாளர்கள் வேறு சேனல்களுக்கு தாவிவிடாத அளவுக்கு சுவாரஸ்யமாக விளம்பரங்களைத் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த விளம்பரங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து TEA (Thomas Edison Advertisement Award) விருதினை எடிசன் விருது நிறுவனம் ஏற்பாட்டில் வழங்குகிறது என விருது குழு தலைவர் செல்வகுமார் கூறினார்.