‘தண்டட்டி’ இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் வெற்றிக் கதாநாயகனாக   வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற்கொள்கிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ்சின் 16வது  தயாரிப்பாக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது

இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர் பற்றிய விவரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்.