அக்ஷய் குமார் நடிக்கும் இந்திப் படம் ‘கபார் இஸ் பேக்’ வீடியோ கேம் ஆகி வருகிறது!
இப்போது பிரபலமான பெரிய படங்களின் பெயரில் வீடியோ கேம்ஸ் வரத் தொடங்கி வெற்றி பெற்று வருகின்றன. ஹாலிவுட் படங்கள் இந்த ‘கேம்’வாகனத்தில் ஏறி பிரபலமாயின. நம் நாட்டிலும் இந்த முயற்சி இப்போது பெருகி வருகிறது.
அக்ஷய்குமார், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வளர்ந்து வருகிற இந்திப் படமான’ கபார் இஸ் பேக்’ படத்தின் வீடியோ கேம் மே 1ல் வர இருக்கிறது . பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உள்ளது.
தமிழில் பெரிய வெற்றி பெற்று பேசப்பட்ட ‘ரமணா’ ஏற்கெனவே தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யப் பட்டு வெற்றி பெற்றது. இப்போது இந்தியிலும் உருவாகிறது. ஆம்.. ‘ரமணா’வின் இந்தி வடிவம்தான் ‘கபார் இஸ் பேக்’ .இதை இயக்குநர் க்ரிஷ் இயக்க ,சஞ்சய்லீலா பன்சாலியுடன் வயாகாம் 18 பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
மே 1 முதல் உலக கேம் ரசிகர்களை ‘கபார் இஸ் பேக்’ கேம், பரபர பரவசத்தில் தள்ள உள்ளது;விறு விறு வியப்பில் ஆழ்த்தவுள்ளது.
அப்படி என்ன இதில் புதுமை விசேடம் என்றால், பொதுவாக ஒரு கேம் என்றால் ஒரே வித எண்ணத்தில்தான் விளையாடுவர். கேம் விளையாடுபவர் கடைசிவரை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது சுட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இப்படித்தான் கேம்களில் பெரும்பாலானவை வடிமைக்கப்பட்டிருக்கும். இதில் 3 வித தாக்கத்தை உள்ளடக்கிய த்ரில் அனுபவம் காத்திருக்கிறது.
இதில் 3 வித நிறம், தரம்,உயரம், பரவசங்கள் உள்ளன. முதல் நிலையில் ஒளிந்து பதுங்குவது அடுத்தநிலையில் தாக்குவது மூன்றாவது நிலையில் துரத்துவது என விளையாடுபவர் மூன்று வேடங்கள் ஏற்று மூவித மனோபாவத்தில் விளையாடி இன்புறலாம் அதுவும் ஒரே விளையாட்டில்.
முதல் நிலையில் மறைந்து, ஒளிந்து கண்ணா மூச்சி போல ஆடலாம். வெளியே தெரிந்து விட்டால் அலாரம் அடிக்கும்;ஆட்டம் இழப்பர்.
அடுத்த நிலையில் எதிரியை அடித்து உதைத்து துவைத்து வீழ்த்தப் போராட வேண்டும். எதிரியை வீழ்த்தினால் வெற்றி. இல்லையென்றால் ஆட்டம் இழக்க வேண்டி வரும்.
மூன்றாம் நிலையில் கார் சேசிங் இருக்கும்.அந்தக் காரைக் கொண்டு பயணம் செய்து குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடம் போய் சேர வேண்டும். தெருக்களும் சாலைகளும் தடைகளாக எதிர் வினையாக இருக்கும்படி விரியும். அதையும் கடந்து குறிப்பிட்ட இடத்தை அடைவதுதான் பெரிய சவால்.
ரத்த நாளங்களில் விறுவிறு பரவச அலையடிக்கும்படி இது உருவாகி யுள்ளது.
ஏற்கெனவே ‘கத்தி’ கேமை வடிவமைத்தவர்கள்தான் இதையும் அமைத்துள்ளார்கள். ”சர்வதேச புத்திசாலித் தனத்துடனும் நவீன தொழில்நுட்ப அசத்தல்களுடனும் இது உருவாகியுள்ளது. 100% த்ரில் அனுபவத்துக்கு உத்திரவாதம் தருகிறோம் ” என்கிறார் தயாரிப்பு நிறுவனரும் , சி இ ஓ வுமான சிவனேஸ்வரன் சிவானந்தம்.
“மே 1 முதல் புதிய விளையாட்டு அனுபவத்துக்கு தயாராகலாம் சாகசம் புதிது. அதுதரும் பரவசம் இனிது” என்கிறார் அவர்.
வீடியோ கேம்கள் ஏற்கெனவே ஆண்ட்ராய்டு சாதனத்தில் வெற்றி பெற்றுள்ளன. இப்போது
ஐ போன்களிலும் விண்டோஸிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.