தொட்டால் நோய் விலகும்: ‘ரெய்கி’ எனும் தொடுமுறை சிகிச்சை!

dr-meenakshiஉலகில் அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபங்சர் என்று பல விதமான மருத்துவ முறைகள் உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறும் இன்னொரு மருத்துவ முறைதான் ‘ரெய்கி’ இதன் தாயகம் ஜப்பான் நாடாகும்.

மருந்துகளின்றி நோயைக் குணப்படுத்தும் இப்முறை ‘தொடு முறை சிகிச்சை’ எனப்படுகிறது. இம்முறையில் சிகிச்சை அளிப்பதுடன் பலருக்கு பயிற்சியும் அளித்து அவர்களைப் பயன்பெறச் செய்து வருகிறார் டாக்டர் . மீனாட்சி. இவர் பிரபலமான அலோபதி மருத்துவர். நடிகர் ராம்கியின் மூத்த சகோதரியும் கூட அவரைச் சந்தித்த போது..!

ரெய்கியில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?


அதற்கு முன் என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ. முடித்துவிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றினேன். 20 ஆண்டுகளுக்குமுன் இந்த ரெய்கி முறையை கேள்விப்பட்டு கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதை என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பயன்படுத்திப் பார்த்தேன். அலோபதி மருந்துகளும் அளித்து கூடுதலாக இதையும் சேர்த்து சிகிச்சை அளித்ததில் நல்ல பலன் கிடைத்தது.

ஒருகட்டத்தில் இவ்வளவு நல்ல மருத்துவமுறையை நாம் பிறருக்கும் கற்றுக் கொடுத்துப் பயன் பெறச் செய்தால் என்ன என்று தோன்றியது. அதன்பிறகு அரசுவேலையை விட்டுவிட்டு ரெய்கியைப் பயன்படுத்தி பலருக்கு சிகிச்சையும் பயிற்சியையும் அளிக்கத் தொடங்கினேன். இதுவரை என்னிடம் ஆயிரக்கணக்கான வர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள்.

ரெய்கி மருத்துவமுறை எப்படி இயங்குகிறது விளக்குவீர்களா.? 


இது ஜப்பானில் பிறந்த முறையாகும். இதைக் கண்டுபிடித்து  உருவாக்கியவர் மிக்காவோ உசுஇ. அவரிடம்  மாணவன் ஓருவன் ஒரு கேள்வி கேட்டான். ஏசு மட்டும் பலரைத் தொட்டால் குணமானது. மற்றவர் தொட்டடால் ஏன் குணமாவதில்லை.? எல்லாரும் தொட்டால் குணமாக்க முடியாதா? என்று கேட்டான் .இக் கேள்விக்கு விடை தேடி பல நாடுகளுக்குச் சென்று வந்தார். பல கால முயற்சி, தேடலுக்குப் பின் அவர் கண்டுபிடித்ததுதான் ரெய்கி.

ரெய்கி என்பதில் ‘ரெய்’ என்கிற ஜப்பானிய சொல்லுக்கு பிரபஞ்சம் என்று பொருள். ‘கி’ என்றால் சக்தி,சக்தியால் குணப்படுத்துதல். அதாவது நம்மைக் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்திதான் மின்காந்த அலை. அதை முறைப்படுத்தி பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துவதே இம்முறையாகும்.

இந்த முறையைக் கற்றுக் கொண்டவர்கள் தனக்கும் பிறருக்கும் இதைப் பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். மருந்துகள் எதுவும் இல்லை. பக்க விளைவுகள்  எதுவும் இல்லை. உள்ளங்கையால் நோயாளியைத் தொட்டு அளிக்கப் படும் சிகிச்சை இது.

அக்குபிரஷர் போலவா இது..?


அக்குபிரஷர் என்பது சில குறிப்பிட்ட புள்ளிகளில் அழுத்தி செய்யப் படுவது. நம் ரெய்கி மெல்ல தொட்டு செய்யப் படுவது. இம்முறை மற்ற மருத்துவ முறை எதையும் குறை கூறுவதும் இல்லை,விமர்சிப்பதும் இல்லை. இது ஒரு எளிய முறை. மற்ற மருத்துவ முறைகளுடன் இணைத்து இதையும் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

இதைப் பயன்படுத்துவது எப்படி என்று சொல்லுங்கள்..?


உதாரணமாக புற்றுநோய் உள்ளவர்களுக்கு கீமோ தெரபி அளிக்கப்படும் போது உடல் எரிச்சல் ஏற்படும். முடி கொட்டும். அப்போது ரெய்கியை இணைத்துக் கொடுத்தால் அந்த எரிச்சல் இருக்காது. முடி கொட்டுவதும் குறையும்.

ஒரு ரெய்கி மருத்துவர் எப்படி இதைக் கற்றுக் கொள்கிறார்? எப்படி பயன்படுத்துகிறார்?


முதலில் ஒரு ரெய்கி மாஸ்டரிடம் இதை கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான மந்திரங்கள் சூத்திரங்களை சிலநாட்களிலேயே கற்று குருவிடம் தீட்சை பெற்று தனக்கும் பிறருக்கும் சிகிச்சை அளிக்கலாம். இதில் 3 நிலைகள் உள்ளன. முதலாவது தான் கற்று தனக்கு சிகிச்சை அளிப்பது, .அடுத்தது தனக்கும் பிறருக்கும் சிகிச்சை அளிப்பது. மூன்றாவதாக மனநிலை பிரச்சினை உள்ளவர்களுக்குசிகிச்சை அளிப்பது, நான்காவதாக பயிற்சி அளிக்கும் மாஸ்டர் நிலை.

இதைக் கற்றுக் கொள்ள கல்வித் தகுதி தேவையில்லை. எளிமையானது. குரு வழிபாடும் இல்லை. குடும்பத்தில் ஒருவராவது கற்றுப் பயன்பெறலாம்.

முறைப்படி கற்ற ஒருவர் அந்த சக்தி அடைவதை தன் உள்ளங்கைகள் சூடேறுவதை கொண்டு உணர முடியும்.

இது நம்பிக்கை சார்ந்த ஒன்று போலத் தெரிகிறதே..?


நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட இதைக் கற்கலாம். இதுவும் அறிவியல் பூர்வமானதுதான். கண்ணுக்கு தெரியாத மின் காந்த அலைகள் நம்மைச் சுற்றி உள்ளன. என்பதை அறிவியல் ஒப்புக் கொள்கிறதுதானே?.

இதை நம்பிக்கையே இல்லாதவரும் கற்றுக் கொள்ளலாம்.                                            

இப்படிப்பட்ட முறை ஏன் பிரபலமாகவில்லை?

அற்புதங்கள் என்கிற பெயரில் செய்யப்படும் பலரும் இதை செய்து வருகிறார்கள். ஒருவர் தலையில் தொட்டால் நோய் குணமாகிறது. தடவிக் கொடுத்தால் வலி குறைகிறது என்றெல்லாம் கேள்விப் படுகிறோம். அவர்கள் ஏதோ சக்தி படைத்தவர்களாக பேசப்படுகிறார்கள். அவர்கள் செய்வது தெரிந்தோ தெரியாமலோ ரெய்கியாகவோ கூட இருக்கும்.

பிரபல பல மருத்துவர்கள் இதைக்கற்று தங்கள் மருத்துவத்துடன் இணைத்து சிகிச்சை செய்கிறார்கள். ஆனால் இதை வெளியே சொல்வதில்லை.

கற்றுக் கொள்வது எப்படி?


எளிதாக இருப்பதால் இது பரவவில்லை. இதன்அருமை தெரியவில்லை. விளம்பரம் இல்லை. எனவே பரவவில்லை.

‘எனர்ஜி நெஸ்ட்ஸ்’ எனப்படும் பயிற்சி நிலையம் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. நாடெங்கும் ரெய்கியைப் பரப்பி வருகிறது. விரைவில் உங்கள் ஊர் அருகிலும் முகாம்கள். பயிற்சிகள் நடத்தும்.