சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று தலைவராக நடிகை கே.நளினி, செயலாளராக பூவிலங்கு மோகன்,பொருளாளராக தினகரன், துணைத்தலைவராக மனோபாலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். .சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா ஜெர்மன்ஹாலில் நடைபெற்றது
விழாவில் சிவ கார்த்திகேயன் பேசும் போது “நான் சின்னத்திரையிலிரு ந்து வந்தவன் என்பதில் பெருமை மட்டுமல்ல கர்வமும் படுகிறேன். என் முதலிபடம் ‘மெரினா’ ஒரு கோடி ரூபாயில் தயாரான படம். அதற்கு முதல் நாளில் முதல் ஷோ ஹவுஸ் புல்லாக சின்னத்திரை எனக்கு கொடுத்த பெயர்தான் காரணம். என் படங்களில் சின்னத்திரைக் கலை ஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க என்னாலானதைச் செய்வேன்”என்றார்.
நடிகை அம்பிகா பேசும்போது “சின்னத்திரை நடிகர் சங்கம் கொண்டு வந்துள்ள இலவச மருத்துவ சோதனை திட்டம் நல்ல வாய்ப்பு, பயனுள்ளது இதை எல்லாரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இரண்டு ஆண்டுகளாகபிரெஸ்ட் கேன்சர் சோதனையான மே மோகிராம் சோதனை செய்து வருகிறேன். பிரெஸ்ட் கேன்சர் மார்பகப்புற்றுநோய் சோதனை என்றாலே எல்லாரும் செய்து கொள்ள கூச்சப் படுகிறார்கள். அச்சப் படுகிறார்கள்.
யாருக்கும் தெரிந்து விடுமோ என்று பயம். யாராவது அசிங்கமா படமெடுத்து யூடியூபில் போட்டு விடுவானோ என்று பயம். நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காகத்தானே போகிறோம். ஏன் பயப்படவேண்டும்? அப்படிப்பட்டவனுங்க அப்படி போட்டால் போடட்டும். அப்படிப்பட்டவனுங்க பற்றிக் கவலைப் படக் கூடாது. அப்படிப் போகும் போது என்னைக் கூப்பிடுங்கள் முதல் ஆளா நான் முன்னாடி வந்து நிற்கிறேன். இதற்காக பயந்து சோதனை செய்து கொள்ள போகாமல் இருக்காதீர்கள்.” என்றார் ஆவேசமாக
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் டி.சிவா பேசும் போது “இன்று சின்னத்திரை பெரிய அளவில் வளர்ந்து பெரிய திரையாக வளர்ந்துள்ளது. ஏராளமான திறமைசாலிகள் இங்கு இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு பயிற்சி பெற்றார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
முன்பெல்லாம் ஏதாவது ஒரு தொடர்தான் நன்றாக இருக்கும் இன்று 5 தொடர் வருகிறது என்றால் 5மே நன்றாக இருக்கின்றன. பார்க்கத் தவறி விட்டால் பதிவு செய்து பார்க்கும் நிலையில் இன்றைய தொடர்கள் உள்ளன. சின்னத்திரை தொடர்களில் தரம் சினிமாவுக்குப் போட்டியாக உள்ளன. சில எங்களை பயமுறுத்துகின்றன. நீங்கள்தான் பெரிய திரை.
நாட்டில் இன்று குற்றங்கள். குறைய காவல் நிலையங்கள் மட்டும் காரணமல்ல தொடர்களும்தான். வீட்டில் எல்லோரையும் கட்டிப்போட்டு பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. தொலைந்து போன நல்ல சினிமா எல்லாம் இப்போது சீரியல்களாக வருகின்றன.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் சங்கம் உங்களுக்கு முடிந்த ஒத்துழைப்பு தரும். “என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவி, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், கே. ராஜன், கலைப்புலி தாணு,குட்டி பத்மினி இயக்குநர்கள் கே. ஆர். செல்வராஜ், கணேஷ்பாபு சின்னத்திரைஇயக்குநர்கள் சங்கத் தலைவர் கவிதாயரதி உள்ளிட்ட பலரும் வாழ்த்திப் பேசினர்.