கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ‘நாலந்தா’ சர்வதேச பொதுப்பள்ளி மற்றும் ஜுனியர் கல்லூரியில் நடை பெற்ற ஆண்டுவிழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ அஃகு ‘என்னும் குறும்படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர.மாலதி கிருஷ்ணமூர;த்தி ஹோலா,தமிழ்த் திரைப்பட முன்னணி இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும்
நடன இயக்குநர் பாபா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலில் பேசிய நடன இயக்குநர் பாபா பாஸ்கர்
”மாணவர்கள் சீரும் சிறப்புடனும் கல்வியை பயில வேண்டும் ஆங்கிலக் கல்வியை நன்றாக கற்க வேண்டும் எனவும் மேலும் ஆங்கில அறிவு இல்லாமல் சினிமா துறையில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்றார் .
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி அதை மறுத்தார்.அவர் பேசும் போது
”ஆங்கிலம் கல்வியுமல்ல. அறிவு சாரந்ததுமல்ல ஒரு சாதாரண மொழி
அது நமக்கு ஒரு தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுகிறது. எனவே மாணவர்கள் ஆங்கிலம் மீது ஐயம் கொள்ளாமல் கற்க வேண்டும். மேலும் அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகளில் தான் பயின்றார்கள்” என்பதை எடுத்து கூறினார்.அவர் கூறிய வார்த்தைகள் மாணவர்கள் அனைவரையும் நெகிழ வைத்து உற்சாகத்தை கொடுத்தது.
அஃகு என்ற குறும்படம் ஆசிரியரர்மற்றும் பெற்றோரின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறும் வகையில் மிகவும் அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது. இக்குறும்படம் உருவாக்கத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் படத்தை உருவாக்கிய குறும் பட இயக்குநர் புவன் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் மகிழ் திருமேனி.