மக்கள் பாசறை வழங்கும் ஆர்.கே.நடிக்கும் படம் ‘என்வழி தனிவழி’ இதனை இயக்கியுள்ளார் ஷாஜி கைலாஸ். இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் வைரமுத்து, இளையகம்பன்.
படத்தின் இசையை விஜய் சம்பிரதாயமான முறையில் வெளியிட்டார்.
விஜய் ஆடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆர்.கே.வி ஸ்டுடியோவில் படத்தின் அறிமுகவிழா நடைபெற்றது.
பேசிய பலரும் படம் பன்ச்கள் நிறைந்தது என்று குறிப்பிட்டார்கள். ஆனால் மேடையிலேயே சில பன்ச்கள் அரங்கேறின.
படம் பற்றிப் பேச வந்த சிங்கமுத்து கதாநாயகியைப் பற்றிக் குறிப்பிடும்போது “பூனம் கவுர் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெறுவார். கொடி கட்டிப் பறப்பார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படத்தில் குண்டாக இருக்கிறார் நேரில் இப்படி மெலிந்தது போல் தெரிகிறார். இதை அவரிடம் கேட்டேவிட்டேன். அது தான் மேஜிக் என்றார்.. என்ன மேஜிக்கோ? ”என்றார்.
டிபி. கஜேந்திரன் பேசும் போது.. தொடங்கியதுமே ” நிகழ்ச்சி தாமதமாகிறது என்று வருத்தமாக காலதாமதத்திற் கு மன்னிக்கவும் என்றார்கள். எனக்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகக் கூடாதா என்றிருந்தது. அப்போது தானே அர்ச்சனாவை பார்த்துக் கொண்டே இருக்க முடியும். அர்ச்சனாவை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியும். இதைத்தான் மேடையில் நானும் சிங்கமுத்துவும் பேசிக் கொண்டிருந்தோம். ” என்றதும் அனைவரும் சிரித்து விட்டனர். அவர் பேசிமுடித்ததும் உடனே மைக் அருகே வந்த அர்ச்சனா ” டி.பி.கஜேந்திரன் சார் நீங்கள் எனக்கு அண்ணன் மாதிரி ” என்று பதில் பன்ச் கொடுத்ததும் மீண்டும் சிரிப்பலை பரவியது. பார்த்தீர்களா பெரிசுகளின் லொள்ளை..?