தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை மற்றும் மனித உணர்வுகளை எடுத்து சொல்லும் கதைகளை கலையுணர்வோடு தயாரித்து தனக்கென தனியிடத்தை பிடித்துள்ள நிறுவனம் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். சினிமாவின் மீது அதித பற்றுடைய ஜேஎஸ்கே .சதிஷ் குமார் அத்தகைய தமிழ் திரைப்படங்களை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கொண்டு சென்று பற்பல விருதுகளையும் , பெருமைகளையும் தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்துள்ளார்.
ஜேஎஸ்கே. ஃபிலிம் கார்பரேஷன் தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் பெருமிதத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற 62 ஆம் தேசிய விருது வழங்கும் விழாவில் ஜேஎஸ்கே. சதீஷ் குமார் இவிருதினை பெற்றார். கடந்த வருடம் ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்கு இவ்விருதினை வென்ற JSK சதீஷ் குமார் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது பெறும் பெருமையையும் பெற்றுள்ளார்.
“ இரண்டாவது முறை தேசிய விருது வாங்குவது மிகவும் பெருமிதமான தருணம். ரசிகர்களுக்கு தரமான படங்களை கொடுப்பதே எங்கள் முழுமுதற் நோக்கம். ஜேஎஸ்கே. ஃபிலிம் கார்பரேஷன் மேலும் ‘நாலு போலிசும் நல்லா இருந்தா ஊரும்’, ‘அண்டாவ காணோம்’, ‘தரமணி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ என பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது. எங்கள் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள JSK ஆடியோ நிறுவனம் திரை இசையை அனைத்து தொழில்நுட்ப வாயில்கள் மூலமாக அனைவருக்கும் கொண்டு சேர்த்து வருகிறது.
ஜேஎஸ்கே. ஃபிலிம் கார்பரேஷன் ஒவர்சீஸ் வெளியீடுகளையும் கவனிக்க தயாராகி வருகிறது. ‘குற்றம் கடிதல்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டு வருகிறோம். இன்னும் சில பட வாய்ப்புகளும் பாலிவுட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது .விரைவில் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தின் பெரும் தூணாய் விளங்கும் அனைத்து ரசிகர்களுக்கும், எங்களது வெற்றிக்கு துணையாய் நிற்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் , திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனப் பெருமிதத்துடன் கூறினார் ஜேஎஸ்கே. சதீஷ் குமார்