உதவி இயக்குநருக்கு சமையல் கற்றுக்கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

ykm‘என்கிட்ட மோதாதே’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது, “போன வாரம் இதே இடத்தில் என்னுடைய உதவி இயக்குநர் இயக்கிய ‘புரூஸ்லீ‘ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வந்திருந்தேன். இந்த வாரம் என்னுடைய இன்னொரு உதவி இயக்குநர் ராமு செல்லப்பாவின் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்திருக்கிறேன்.

இயக்குநர் சேரன்தான் இந்த ராமு செல்லப்பாவை என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்து ‘கூட வச்சுக்குங்க’ என்றார். என்னிடம் உதவி இயக்குநராக சேரும்போதே ராமுவிடம் நான் கேட்ட முதல் கேள்வி ‘உனக்கு சமைக்கத் தெரியுமா?’ என்பதுதான். ஏன்னா அப்போ நான் ரூம்ல சமையல் செஞ்சுதான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். சமைக்கத் தெரிஞ்ச ஆளா இருந்தால் கூட உதவியா இருக்குமேன்னுதான்.

‘தெரியும்’ என்றார் அதன் பிறகு நான் அவரை சமைக்க சொன்னேன். அவர் சமைத்த உணவு மிகவும் மோசமாக இருந்தது.  அதன் பிறகு நான் அவருக்கு முதலில் சமையல்தான் கற்றுக் கொடுத்தேன். அதன் பிறகுதான் என்னிடமிருந்து அவர் சினிமாவைக் கற்றுக் கொண்டார்.

‘வம்சம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அவுட்டோரில் நடைபெற்றது என்பதால் எப்போதும் கூட்டமாக இருக்கும். இவர்தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பார். ஆனால் அப்போதும் மறைந்து இருந்துதான் மைக்கில் கத்தி, கத்தி வேலை வாங்குவார். ஏனென்றால் உயரம் கம்மியாக இருப்பதால் தன்னை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள் என்றார்.

engita-modhadhey-first-lookபின்னர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டார். ஆனாலும் அவ்வப்போது என்னை பார்க்க வந்து போய்க் கொண்டிருப்பார். அப்படியொரு முறை வரும்போது என்னிடம் ‘சியர்ஸ்’ என்னும் தலைப்பில் ஒரு கதையைச் சொன்னார். அதை என்னை தயாரிக்கவும் சொன்னார். ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன்,

ஏனென்றால் அப்படத்தின் கதை அந்த மாதிரி. அந்த படம் ‘யு / ஏ’ வகையறா கதைகூட இல்லை.. அது ஒரு ‘ஏ ஏ ஏ’ வகையை சேர்ந்த கதை. ‘எங்க இருந்து இந்த மாதிரி கதையெல்லாம் பிடிச்ச..?’ என்று நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் ‘இது என்னுடைய நண்பரின் கதை… இதில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன்’ என்றார்.

‘இதை என்னால் தயாரிக்க முடியாது’ என்றதும் சில நாட்கள் கழித்து வந்து ‘வேறு ஒரு கதை எழுதி இருக்கிறேன். இதைக் கேளுங்கள். இந்தக் கதை ‘சுப்பிரமணியபுரம்’ போல இருக்கும்’ என்று சொல்லி கதையைச் சொன்னார். அதுதான் இந்த ‘என்கிட்ட மோதாதே’ படத்தின் கதை.

இந்தப் படத்தின் ட்ரைலர் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளது.. என் சிஷ்யன் என்பதால் படம் நன்றாக ஓட வேண்டும் என்று நானும் நினைக்கிறேன்.” என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.

 

Engitta Modhathey Trailer link

https://www.youtube.com/watch?v=UsNIUUR3v1s