எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது : நடிகர் சங்கப்பொதுக்குழுவில் நாசர் பேச்சு!

64 வது நடிகர் சங்கப்பொதுக்குழுவில்தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில்:

   
இந்த அரங்கத்தை நிரப்பியிருக்கும் என் சக கலைஞர்களுக்கும், நிர்வாககுழு, செயற்குழு, நியமனக்குழுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகலந்த வணக்கம். இது ஒரு முக்கியமான பொதுக்குழு எங்களுடைய மூன்றாண்டு கால நிர்வாகம் இந்த பொதுக்குழுவோடு நிறைவு பெறுகிறது.

எங்கள் நிர்வாகத்தில் பல மதம் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் இருப்பினும் எங்கள் ஒரே நம்பிக்கை இந்த சங்கத்தை வழி நடத்துவது இந்த சங்கத்தை உருவாக்கிய ஆன்மாக்களின் நம்பிக்கை.இந்த நடிகர் சங்கத்தின் மாற்றம் இந்த அரங்கில்தான் நடை பெற்றது.நிர்வாகத்தை கையில் எடுத்தபோது நினைத்ததை சொல்ல வேண்டும் என்ற ஒரு அடிப்படை உணர்வு இருந்தது அது மறுக்கப்பட்ட நிலையில் தீ பிழம்பாக இல்லாமல் ஒளிச் சுடராக மாறியது.

இந்த அரங்கு வழக்கம் போல் இங்கே தான் நடக்கும் ஆனால் நாங்கள் முதல் முறையாக பொதுக்குழு நடத்தும் பொழுது மறுக்கப்பட்டது.லயலோ கல்லூரியில் நடத்தப்பட்டது அது பெரும் மனை விழா போல் காணப்பட்டது.இரண்டாம் பொதுக்குழு பாதி ஏற்பாடு செய்த நிலையில் நட்ட நடு இரவில் மறுக்கப்பட்டது.நான் அரசியல் பேசவில்லை இவர்கள் நினைத்தால் அரசியல் மாற்றத்தை கொண்டு வரலாம் இவங்க செயலை நான் பாராட்டுகிறேன் .எட்டு மணி நேரத்தில் ஒரு குளிர்சாதன கூடாரம் அமைத்து பாரம் பரியமான கூட்டம் நடத்தினார்கள்.

நான் மோற்பார்வை பார்த்ததில் யாரும் சாப்பிடவில்லை தூங்க வில்லை அப்படி நடை பெற்றது.இது மிக நெகிழ்வான பொதுக்குழு.நான் எந்த நிலையில் இந்த அரங்கத்தை விட்டு கடைசியாக சென்றேனோ அதற்க்கு நேர் எதிராக மன நிறைவோடு இந்த அரங்கத்தை பார்க்கிறேன்.

.இந்த பொதுக்குழு நடைபெறும் பொழுது மிக மன அழுத்தத்துடன் காணப்பட்டேன் விஷால் நம்பிக்கையளிப்பார்.முதல் முறையாக மூன்றாண்டு காலகட்டத்தில் நேற்று இரவுதான் நான், கார்த்திக்,விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நிர்வாக ரீதியாக பேசினோம்.அப்போது நெகிழ்ந்தோம் நாளை பொதுக்கூட்டம் ஒரு எதிர்ப்பும் இல்ல ஒருவேளை நாளைக்கு பெருசா வரும் என்று நினைத்தோம்.பெருமையாக இருக்கிறது இந்த மூன்றாண்டு காலத்தில் ஒரு நிலைக்கு நாம் எல்லோரும் வந்துவிட்டோம்.

எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது அப்படி ஒரு வார்த்தை எங்கள் அகராதியில் இல்லை.கைகோர்த்து நின்றவர்கள் எதிர்தார்கள் வாழ்த்தியவர்கள் எதிர்ப்புரை வழங்கினார்கள் ஆனால் எதிப்பவர்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் ஏனேனில் அவர்கள் எங்களை மறைமுகமாக பலமாக்கினார்கள்.எப்படி எதிர் கொள்வது என ஆசிரியர்களாக நின்று கற்றுக்கொடுத்தனர்.நாங்கள் எங்கள் சுயநலத்திற்க்காக வரவில்லை நாங்கள் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற உணர்வு வந்ததும் எப்படி சமாளிப்போம் என்ற பயம் எங்களுக்கு கூடவே இருந்தது.இந்த மூன்றாண்டு காலம் எப்படி நடந்தது என்பதற்க்கு பட்டியல் வேண்டாம் நீங்கள் கட்டுக்கோப்பாக இந்த அரங்கு நிறைந்து உட்கார்ந்து இருந்தது.

தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசுகையில்:
கட்டிடம் வந்தவுடன் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளேன். ஆகையால் மட்டுமே கார்த்தியின் முன்பு பட்டு வேஷ்டி சட்டை நிற்பேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தி, வாசலில் நானும் நிற்கிறோம்.
எங்கள் நிர்வாகத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.எம்.ஜி.ஆர்.ஆர் ஆவியோ, சிவாஜி ஆவியோ கட்டிட நிலத்தில் புகுந்துவிட்டது. கட்டிடம் கட்ட முடியும் வரை போகாது. மறுபடியும் வழக்கு போட்டுப் போரடிக்காதீர்கள். வருகிறாயா. வா என்று நேர்மையுடன் நிற்கிறோம்.

என்றைக்குமே நேர்மை மட்டுமே ஜெயிக்கும். முதலில் பொதுச்செயலாளராக வருவேன் என்று தெரியாது.
மறுபடியும் இன்னொரு இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஆனேன். ஆனால், முதலில் நடிகர் சங்கமே முக்கியம். இந்தக் கட்டிடம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். விரைவில் எம்ஜிஆர் சமாதியைப் பார்த்துவிட்டு நடிகர் சங்கக் கட்டிடத்தைப் பார்க்க வருவது போன்ற ரீதியில் கட்டிடம் இருக்கும். அடுத்த தேர்தலிலும் நிற்போம். ஏனென்றால் கட்டிடத்தைப் பாதியில் விட்டுவிட்டுப் போகும் எண்ணமில்லை.
தமிழ் சினிமாவுக்குத் தமிழக அரசு 10% கேளிக்கை வரி விதித்திருக்கிறது. இந்தக் கேளிக்கை வரி எந்த மாநிலத்திலும் இல்லை. இந்தச் சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்தால் தான் தமிழ் சினிமா நிலைக்கும். கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி, திருட்டு விசிடி என அனைத்து இடர்ப்பாடுகளுக்கு இடையே தமிழ் சினிமா செயல்பட்டு வருகிறது. கேளிக்கை வரியை ரத்து செய்யாவிட்டால் செயல்படவே முடியாது

விழாவில் கலந்துகொன்டவர்கள்

தென்னிந்திய நடிகர் சங்க :
தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ்

ட்ரஸ்டி : ஐசரி கணேஷ்

செயற்குழு உறுப்பினர்கள் :
ராஜேஷ், ஜூனியர் பாலையா, பூச்சி முருகன், பசுபதி, ஸ்ரீமன், உதயா.A.L, ரமணா, பிரேம்குமார், நந்தா, விக்னேஷ், T.P.கஜேந்திரன், M.A.பிரகாஷ், அயூப்கான், பாலதண்டபானி, குட்டிபத்மினி, கோவை சரளா, சிவகாமி, சங்கீதா, சோனியா,

நியமன செயற்குழு உறுப்பினர்கள் :
சரவணன், அஜய்ரத்தினம், லலிதாகுமாரி, காஜா மொய்தீன், மருதுபாண்டியன், பழ.காந்தி, வாசுதேவன்,காளிமுத்து, ஜெரால்டு மில்டன், ரெத்தின சபாபதி, K.K.சரவணன், காமராஜ், கலீலுல்லா ​மற்றும்  திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர் ​

Actor Vishal Sir Speech In 64th AGM Meeting Video Link
 
 
Actor Nasser Sir Speech In 64th AGM Meeting Video Link