நடிகை நமீதா இப்போது 20 கிலோ எடை குறைந்து புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். அவரைப் பார்க்கிற யாரும் நம்பமுடியாமலேயே பார்க்கிறார்கள்.காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை.
இதுபற்றிய அனுபவத்தை நடிகை நமீதா பத்திரிகையாளர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டார். இதற்கான சந்திப்பு நிகழ்ச்சியில் நமீதா பேசும் போது
” என் எடைஅதிகமாகிக்கொண்டே இருந்தது. படவாய்ப்புகளும் குறைந்து விட்டன.
நான் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளானேன்.இதுபற்றி நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை.எடையைக் குறைக்க எவ்வளவோ விதத்தில் முயற்சி செய்து பார்த்து விட்டேன்.என்னென்னவோ பயிற்சி, சிகிச்சை முறைகள் எல்லாம் பின்பற்றினேன். ஆனால் பலனில்லை.
மிகவும் வெறுத்துப் போய்விட்டேன் எப்படியாவது குறைத்தாக வேண்டும், வாழ்வா சாவா என்கிற போராட்டம். அப்படிப்பட்ட சூழலில்தான் சாக்ஷி வெல்னஸ் பற்றி . தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் கேள்விப்பட்டேன்.
எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால் எவ்வளவோ பார்த்தாகி விட்டது. எடைமட்டும் குறையவேயில்லை. இப்படித்தான் அவர்களையும் பார்த்தேன்.ஆரம்பத்தில் அவர்கள் மீது நம்பிக்கையில்லை. முதலில் ஒன்றரை கிலோ எடை குறைந்தது. எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது, பிறகுதான் நம்பிக்கை வந்தது. இப்படி முன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைந்தது. அவர்கள் சிகிச்சை, பயிற்சி, உணவு முறை இவற்றை சரிவர பார்த்துக் கொண்டார்கள். நம்பிக்கையையும் ஊக்கமும் கொடுத்தார்கள். இப்போது நான் நம்பிக்கையுடன்இருக்கிறேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். அவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகிவிட்டேன்.
என்னை இப்போது பார்ப்பவர்கள் என் உணவு பற்றிக் கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ, கிடையாது. நான் ஒரு பீட்ஸாப் பிரியை. பீட்ஸா டோமினோவில் பிளாட்டினம் மெம்பர் நான்,அந்தஅளவுக்கு பீட்ஸா சாப்பிடுவேன். அந்த அளவுக்கு பீட்ஸா சாப்பிட்ட நான் இப்போது மாதம் ஒன்றுதான் சாப்பிடுகிறேன்” என்றார்.
புதிய படங்கள் பற்றி நமீதாவிடம் கேட்ட போது இனி வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தவர் ,ஆக்ஷன் நாயகியாக நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அரசியல் ஈடுபாடு பற்றிக் கேட்ட போது ” எனக்கு அரசியல் ஆர்வம், ஈடுபாடு உண்டு. நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன். பல கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எப்போது அரசியலில் இறங்குவது என்று இப்போதே சொல்ல முடியாது” என்றார்.
படங்கள் இல்லாமல் மார்க்கெட் இழந்த நடிகைகள் ,வாய்ப்பு குறைந்த நடிகைகள் சொந்த ஊருக்குப் போய் விடுவதைப் போல நீங்களும் போவீர்களா? என்ற போது ” என் சொந்த ஊர் குஜராத் என்பதே எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி ரக்ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது.எனக்கு இங்குள்ள பொங்கல்தான். நினைவுக்கு வருகிறது. தமிழ்நாடு. சென்னையை விட்டு செல்லமாட்டேன்” என்றார்.
நிகழ்ச்சியில் சாக்ஷி வெல்னஸ் நிறவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவாஜி குணாபேசும்போது,”இங்கு அல்ட்ரா சவுண்ட் ரேடியோ ஃப்ரிக்குவன்ஸி முறையில் தான் எடை குறைக்கப் படுகிறது. இம்முறையில் கொழுப்பு செல்களை அழித்து வியர்வையாக வெளியேற்றப்படுகிறது.” என்றார். நிகழ்ச்சியில் , சிகிச்சைப் பிரிவுத்தலைவர் ஸ்ரீமன் நாராயணா, தொழில்நுட்பப் பிரிவைச்சேர்ந்த வித்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரும் பேசினார்கள்.