நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தனி ஒரு நாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அப்படி அவர் முதன்மையான பாத்திரத்தில் நடித்த படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம்.
இதில் அவர் ஒரு துப்பறியும் டிடெக்டிவ் ஏஜெண்டாக வருகிறார்.
சந்தானம் ஜமீன்தாரர் குரு சோமசுந்தரத்திற்கும் இந்துமதிக்கும் பிறந்தவர். தன் தாய் இரண்டாம் தாரமாக இருப்பதால் முதல் மனைவியிடம் அவமானப்படுகிறார் ,இப்படி சிறு வயதில் வளரும் சந்தானம் வளர்ந்து பட்டணம் செல்கிறார். அங்கே ஒரு துப்பறியும் ஏஜெண்டாக வலம் வருகிறார்.
அவரது தாய் மரணம் அடைந்து விடுகிறார். இறந்துவிடும் தாயை நேரில் பார்க்க முடியாமல் ஏதோ கடைசியா சென்று காரணம் சொல்லி அவரது உடலை காசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.அம்மாவை இறந்த பின்பு கூட பார்க்க முடியாது சோகம் சந்தானத்தை அழுத்துகிறது.
துப்பறியும் ஏஜெண்டான
சந்தானத்திடம் ஒரு கேஸ் வருகிறது.
வரிசையாக ரயில் பாதையில் பெண்கள் பிணம்தூக்கி வீசப்பட்டு கவனிப்பாரின்றிக்கிடப்பதாகவும், ஆனால் அது யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போய்,காவல்துறையிடம் இருந்து கண்டுபிடிக்க முடியாத கேசில் வைத்து மறைத்தும் விடுகிறார்கள்.
இதில் உள்ள உண்மை அறிய சந்தானம் வருகிறார்.இது போலீசுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. அப்போது அவரது வேலைக்கு சவாலாக அவரே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் சூழலுக்கு தள்ளி விடுகிறார்கள். அதில் இருந்து மீண்டாரா? அவர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் ஏஜென்ட் கண்ணாயிரம்
படத்தின் கதை.
சந்தானம் காமெடி நாயகனாக இருந்து கதாநாயகனாக மாறுவதெல்லாம் சரி. ஆனால் அதற்கான சரியான கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா ? படத்தின் ஆரம்பத்தில் அவரது இளம்பிராயத்துக் காட்சிகள் அம்மாவுடன் அவருக்கும் உள்ள பாசம் காட்டப்படுகிறது.
பரவாயில்லையே என்று நினைக்க ஆரம்பித்தால்,தொப்பரின் கதையாக மாறும்போது இழுவை ஆகிவிடுகிறது.
வழக்கமான சந்தானத்தை இதில் எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார்.பெரிதாக எதிர்பார்த்தால் அவரது பாத்திரம்
சாதாரணமாக வருகிறது.அவருடன் கூடவே பயணிக்கும் சேனல் மீடியாக்காரராக ரியா சுமன் வருகிறார்.குரு சோமசுந்தரம் முனிஸ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி ,ஈ ராமதாஸ் ஆதிரா என பலரும் நடித்துள்ளார்கள்.அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை.குறிப்பாக முனிஸ்காந்த், நான் வெறும் காமெடி நடிகரல்ல என்று அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறார்.
ஏகப்பட்ட லாஜிக் குழப்பங்களாலும், விறுவிறுப்பு கிடைக்காததாலும் ஏஜென்ட் கண்ணாயிரம் மிகச் சுமாரான படமாக மாறிவிடுகிறது.
படத்தில் சந்தானத்தின் புது பாத்திரத்தில் நடிக்க விரும்பும் அந்த முயற்சியைப் பாராட்டலாம் .
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவுப் நன்றாக உள்ளன.
கதை உருவாக்கத்தில் எல்லாம் வித்தியாசமான முறையில் முயற்சி செய்திருந்தாலும் இயக்குநர் மனோஜ் பீதா பலவீனமான திரைக்கதையால் படத்தை சாதாரணமான படம் ஆக்கிவிட்டார்என்றே சொல்ல வேண்டும் மொத்தத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் ஏமாற்றி விட்டார்.